ஒரு மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்பதை கண்டறிய பல காரணிகள் உள்ளன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால், மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் அளவு சரியாக இருந்தால், பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
அதேபோல் ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் கணக்கிட வேண்டும். பெண்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகவும். தற்போதுள்ள பெண்களில் 55 சதவீதம் பேர் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான பெண்கள், ஹீமோகுளோபின் குறைவு, இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பெண்கள், மாதவிடாய் பிரச்னையை சந்திக்கும்போது, அதிகமான ரத்தத்தை இழக்கின்றனர். இந்த சமயத்தில் அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் பெண்கள், அதிகமான இரும்புச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இளமையில் இருந்து இரும்புச்சத்து உணவுகள் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், மாதவிடாய், மகப்பேறு உள்ளிட்ட காலக்கட்டத்தில் பல உடலநல பிரச்னைகள் ஏற்படும் நிலை வரும்.
சிறு வயதில் இருந்தே, கீரைகள் எடுத்துக்கொள்ளும்போது இரும்புச்சத்து அதிகரிக்கும். அதேபோல் மாதுளை, அத்தி, உலர் திராட்சை, திசரி உணவில் எடுத்துக்கொள்ளும்போது இரும்புச்சத்து அதிகரிக்கும். பெண்கள் மாதவிடாய் தொடங்கும்போது வரத்தில் 2-3 நாட்கள் இந்த உணவுகளை கொடுக்கலாம். அதிகளவு இரும்புச்சத்து உள்ள பொருள் எள்ளு. இதனை துவையாலாகவோ, அல்லது வேறு வழியிலோ எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் உளுந்து சோறு, கொடுக்கும்போது கருப்பை ஆரோக்கியம்மேம்படும். உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“