சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சில உணவுகளை அவ்வப்போது நமது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அதே சமயம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு தான் நெய்.
நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்றாலும், கூட அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நெய் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் இருந்தால் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு என்பதே ஒரு சர்ச்சையான பிரச்னைதான். இது நல்லதா கெட்டதா என்ற விவாதம் தற்போதுவரை இருக்கிறது.
அதே சமயம் சில புள்ளிவிவரங்களை பார்க்கும்போது நல்ல கொழுப்பை விட கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்போது, கண்டிப்பாக நெய்யை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெண்ணையும் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் மற்றவர்கள், நெய் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. தினமும் உணவில் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிடும்போது மூட்டுவலி வராது. எண்ணெய் வெண்ணெய், நெய் எல்லமே உடலில் நெய்ப்பு தன்மைக்கு அவசியம்.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நெய் கொடுக்க வேண்டியது அவசியம். தினமும் 3-5 கிராம் நெய் சாப்பிடுவது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நல்லது. ஆனால் குழந்தை அதிகமாக சேட்டை செய்தால் நெய் கொடுக்க கூடாது. மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு நெய் கொடுப்பது அவசியம். வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு நெய் கொடுக்க கூடாது. சராசரியான ஒரு குழந்தை, சரியாக எடையில் இருந்தால் கண்டிப்பாக தினமும் 3-5 கிராம் நெய் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“