ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான பழம் கொய்யா. இந்த பழம் சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கிய நன்மைகளை அடங்கியது. இதில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) உள்ளது. கொய்யாப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஆரோக்கியமாக பராமரிக்க உதவியாக இருக்கும்.
நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக, உங்கள் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்க உணமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம். பல உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இரத்த குளுக்கோஸின் அதிகரிப்பு உங்கள் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் வெளியீட்டைக் குறிக்கிறது.
அதிக இன்சுலின் அளவுகள் கூடுதல் சர்க்கரையை கொழுப்பாக சேமித்து வைக்கலாம், இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடு அளவுகள் மற்றும் பசியின்மை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தீர்வாக இருக்கும்.
கொய்யாப்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், லைகோபீன், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு 12-24 ஆக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பை குறைக்க ஏற்ற உணவாக இருக்கும். மேலும், கொய்யாப்பழம் இரும்புச்சத்து, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் மதிப்புமிக்க ஆதாரமாக உள்ளது.
மேலும் அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) ஒரு உணவுப் பொருள் இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வாறு உயர்த்துகிறது என்பதை அளவிடுகிறது. உயர் GI கொண்ட உணவுகள் விரைவாக உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாகிறது. மாறாக, குறைந்த ஜி.ஐ கொண்ட உணவுகளை சாப்பிடும்போது மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க விரும்புபவர்களுக்கு கொய்யா ஒரு சிறந்த வழி. ஏனெனில் இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மதிப்பெண் 12-24 ஆக உள்ளது. மேலும், 100 கிராம் கொய்யாவில் 8.92 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது, இது ஜீரணிக்க மற்றும் ஆற்றல் உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. இதன் விளைவாக, இது இரத்த குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் மாறுதல்களை தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கான கொய்யா
கொய்யா நேரடியாக சர்க்கரை நோயை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், இது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய சத்தான பழமாகும். கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா பாதுகாப்பற்றது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
கொய்யாவில் மிதமானது முதல் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உள்ளது, அதாவது இது மிகவும் மெதுவாக உறிஞ்சப்படுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவு. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, கொய்யாப்பழம் சிறந்த தேர்வாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த நார்ச்சத்து ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்க உதவுகிறது. கொய்யாப்பழம் கொழுப்பை எரிக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சுவையான, குறைந்த கலோரி சிற்றுண்டியாகும். அது மட்டுமல்லாமல், கொய்யா நல்ல அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுதாக உணர உதவும்.
மேலும், அதிக ஃபைபர் உள்ளடக்கம் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. கடைசியாக, பழுக்காத கொய்யாவில் மற்ற பழங்களை விட மிகக் குறைவான சர்க்கரை உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”