சைவ உணவுகளில் காளான் பலருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது. அசைவம் தனக்கு பிடிக்காது என்று சொன்னால் அவர் பெரும்பாலும் காளான் சாப்பிடும் ஒரு நபராகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு, சைவ உணவுகளில், அணைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் இந்த காளானை வைத்து பிரியாணி, ப்ரை, உள்ளிட்ட பல்வேறு உணவுகள் சமைக்கப்படுகிறது. சமைப்பதற்கு ஏற்றபடி அதன் சுவையும் சிறப்பானதாக இருக்கும்.
Advertisment
அதே சமயம், சமைப்பதற்கு முன்பாக, இந்த காளானை சுத்தம் செய்வது என்பது பலருக்கும், ஒரு சலிப்பான வேலையாக இருக்கும். சுத்தம் செய்யும்போது அதில் ஏற்படும் வழுவழுப்பு தன்மை பலருக்கும் பிடிப்பதில்லை. அதேபோல் பேக் செய்யப்பட்டு வரும் காளானில் மேலே கரும்புள்ளிகள் இருக்கும்இ இதனை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் பின்விளைவுகள் அதிகரிக்கும். காளானை வாங்கும்போது அதில், எக்ஸ்பிரி டேட், மற்றும் காளான நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
தற்போது சமைப்பதற்கு முன் காளானை எப்படி சுத்தம் செய்வது என்பதை பார்ப்போம். பேக் செய்யப்பட்ட காளானை வாங்கி வந்து சமைப்பதற்கு முன்பு, அதனை பிரித்து ஒரு பவுலில் குளிர்ந்த தண்ணீரில் ஊறவைக்கவும். அதன்பிறகு, ஒவ்வொரு காளானாக எடுத்து அதன் மேல் இருக்கும் அழுக்கு மற்றும் கரும்பும்புள்ளிகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு, காளான் மேல் இருக்கும் தோல்களை உரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
அடுத்து ஒரு பவுலில் தண்ணீர் எடுத்து ஒலு எலுமிச்சை பழ சாறை அதனுடன் சேர்த்து, சுத்தம் செய்து தோல் உரித்து வைத்துள்ள காளானை அதில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அதன்பிறகு இந்த காளானை எடுத்து குளிந்த நீரில் சுத்தம் செய்து எடுத்தால், காளான் மீது இருக்கும் பாக்டீரியா மற்றும் இதர கிருமிகள், எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் மூலம் அழிந்துவிடும். அதன்பிறகு நீங்கள் காளானை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.