இன்றைய காலக்கட்டத்தில் அசைவம் என்று எடுத்துக்கொணடால் அதில் சிக்கனுக்கு முதல் இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் கடைசிகள் பல வெரைட்டிகளில் கிடைக்கிறது. தத்தூரி சிக்கன், க்ரில் சிக்கன், சிக்கன் 65, பிரைடு சிக்கன் என பல வகைகளில் கிடைக்கிறது. அந்த வகையில் ஆந்திரா ஸ்டைல் கிரீன் சிக்கன் சில்லி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி 40
கொத்தமல்லி இலை- சிறிதளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 8
பூண்டு – 10 பல்
இஞ்சி 2 துண்டு
உப்பு தேவையான அளவு
வெங்காயம் – 2
சோம்பு – கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸியில், பச்சை மிளகாய் 5, முந்திரி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்ல இலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, அதில் மிக்ஸியில் அரைத்த பேஸ்டை சேர்த்து நன்று கிளறிவிடவும். அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சோம்பு, சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன், அதில் கிளறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். அடுத்து மிக்ஸி ஜார் கழுவிய தண்ணீரை ஊற்றி அதில் கறிவேப்பிலை மிளகுத்தூள், பச்சை மிளகாய் சேர்க்கவும். சிக்கன் நன்கு வெந்தபின் இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கிரீன் சிக்கன் சில்லி ரெடி.