எடையை குறைக்கும் சுவையான கொள்ளு ரசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 1/2 லிட்டர்
தக்காளி - 2
Advertisment
Advertisements
வெங்காயம் - 7 முதல் 8
பூண்டு - 7 அல்லது 8 கிராம்பு
பச்சை மிளகாய் - 2
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரக விதைகள் - 1 & 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிகொத்தமல்லி இலைகள் - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கொள்ளை எடுத்து நன்றாக கழுவி, தக்காளி தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த கொள்ளுவில் இருந்து தண்ணீரை மட்டும் பிரிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
வேக வைத்த கொள்ளை, நீங்கள் தேங்காய் சேர்த்து தாளித்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில், சீரகம், மிளகு, வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு, சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு கொள்ளு தண்ணீரில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தக்காளியை அதில் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.புளி கரைசலையும சக்சை இல்லாமல் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலில், எண்ணெய் விட்டு, வரமிளகாய், பச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு சின்ன வெங்காயம், சேர்த்து வணக்கிவிட்டு, பெருங்காய பொடியை சேர்க்கவும்.
அதன்பிறகு புளி கரைசலை தாளிப்பில் சேர்த்து கிண்டவும். அதன்பிறகு கொள்ளு தண்ணீர் தக்காளி சேர்த்த கலவையை ஊற்றவும். அடுத்து இதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கொதிக்க வைக்கவும்.
அதன்பிறகு ரசம் கொதித்தவுடன், இறுதியாக அரைத்து வைத்துள்ள மிளகு சீரக பொடியை சேர்த்து, கொதிக்க விடாமல் நுரை கட்டியவுடன், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், சுவையான கொள்ளு ரசம் ரெடி.