வெயிட் குறைக்கும் போது சதை இறுகும்... உணவியல் நிபுணர் சொன்ன ரெசிபி; இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

உடல் எடையை குறைக்கும்போது, உடலில் சதைகள் இறுககாமல் ஆங்காங்கே தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற தொற்றத்தை உருவாக்கும்

உடல் எடையை குறைக்கும்போது, உடலில் சதைகள் இறுககாமல் ஆங்காங்கே தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற தொற்றத்தை உருவாக்கும்

author-image
WebDesk
New Update
sAMBAR sADHAM

பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்கள், எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அவ்வாறு உடல் எடையை குறைக்கும்போது, உடலில் சதைகள் இறுககாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரி பிரச்னை இருக்கும்போது தசைகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற தொற்றத்தை உருவாக்கும். இந்த மாதிரி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போமா?

Advertisment

கினோவா என்ற தானியம், தசையில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உதவும். இந்த கினோவா தானியத்தில் சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

Advertisment
Advertisements

நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு, - தாளிக்க தேவையான அளவு

முந்திரி, பூண்டு – 6

கறிவேப்பிலை ஒருகொத்து

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தக்காளி – 2

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்’

உப்பு – தேவையான அளவு

பெருங்காயப்பொடி – சிறிதளவு

கேரட், பச்சை பட்டாணி, பீன்ஸ், அவரைக்காய் – அரை கிலோ

மாங்காய் – 3 பீஸ், கத்தரிக்காய் 3, உருளைக்கிழங்கு -1

தேங்காய் துருவல் – ஒரு கப்

துவரம்பருப்பு – ஒரு டம்பளர்

சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்

கினோவா – 2 கப்

பச்சை மிளகாய்- 2

மல்லி இலை – ஒரு கைப்பிடி

செய்முறை:

முதலில் கினோவா மற்றும் துவரம்பருப்பை நன்றாக சுத்தம் செய்து ஊறவைத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கர் வைத்து அதில் எண்ணெய் நெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், மிளகு, முந்திரி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

அதன்பிறகு, கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அடுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும்.

இறுதியாக துவரம்பருப்பை சேர்த்து வதக்கி, சாம்பார் பொடி சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையை அளவான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அடுத்து ஊறவைத்துள்ள கினோவாவை அதில் சேர்க்கவும்.

அதன்பிறகு குக்கரை முடிவிட்டு 3 விசில் விட்டு இறக்கினால், கினோவா சாம்பார் சாதம் ரெடி. மேலே நெய், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி சாப்பிடலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. 

Tamil Recipe Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: