சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவைத் தேடுபவர்களுக்கு, இதோ ஒரு அருமையான வழி! தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், தங்கள் காலை உணவில் சுரைக்காய் தோசையைச் சேர்த்துக்கொள்ளலாம். இது மிகவும் எளிமையான, அதேசமயம் சத்தான காலை உணவு. எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாதி அளவு சுரைக்காய்
கடலைமாவு
உப்பு (தேவையான அளவு)
வெங்காயம் – கால் கப்
கொத்தமல்லி – கால் கப்
கேரட் - கால்கப்
ஒரு முட்டை (விருப்பத்திற்கேற்ப)
சீரகம், பெருங்காயத்தூள்
செய்முறை:
முதலில், சுரைக்காயின் தோலைச் சீவி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். இந்த விதைகளை நீங்கள் சட்னி செய்ய பயன்படுத்தலாம். விதை நீக்கிய சுரைக்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், சுரைக்காய் துருவல், துருவிய கேட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, சீரகம் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கடலை மாவையும் சேர்த்து பிசைந்துவிடவும்.
இந்த மாவை தோசைக்களில் எண்ணெய் விட்டு, அடைமாதிரி போட்டு எடுத்தால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. சுடச்சுட பரிமாறினால், இந்த தோசை தனியாகவே சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைத் தரும்போது, மாவுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கலந்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.