சுகரை கன்ட்ரோலில் வைக்கும்... பெண்களுக்கு அருமருந்து; வெண்டைக்காயில் டேஸ்டி துவையல்: ஈஸி டிப்ஸ் பாருங்க!

பல நன்மைகளை கொண்ட வெண்டைக்காயில், துவையில் செய்து சாப்பிடலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல. வெண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

பல நன்மைகளை கொண்ட வெண்டைக்காயில், துவையில் செய்து சாப்பிடலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல. வெண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
Vendaikka Thuvai

நமது அண்றாட வாழ்க்கையில், எளிதாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். பல ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு ஆரோக்கியமான இந்த வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து, எடை குறைப்புக்கு உதவுகிறது. மேலும் இந்த நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதைத் தாமதப்படுத்துகிறது.

Advertisment

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வெண்டைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காய் விதைகளை வறுத்து சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். அதிக நார்ச்சத்து கொண்ட வெண்டைக்காய் மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது. இதிலுள்ள ஃபோலேட், ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். இப்படி பல நன்மைகளை கொண்ட வெண்டைக்காயில், துவையில் செய்து சாப்பிடலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல. வெண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

வெண்டைக்காய்- கால் கிலோ

கடலை பருப்பு- 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

வர மிளகாய்- 2 பெரிய

வெங்காயம்-1

பூண்டு- 3 பல்

புளி- நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை- ஒரு கொத்து

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதிலே முக்கால் பதம் வேகும் வரை வதக்கியபிறகு, அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து அதனுடன் வேகவைத்த வெண்டைக்காயையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார். நீங்களும் ட்ரைப்பண்ணி பாருங்க.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: