சுவையான வெந்தய குழப்பு எப்படி செய்வது? செப் தீனா ரெசிபி
தேவையான பொருட்கள்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை
கொத்தமல்லி
மஞ்சள் தூள்
குழப்பு பொடி – 2 டீஸ்பூன்
புளி – லெமன் சைஸ்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் சீரகம் மற்றும் வெந்தயம் இரண்டையும் சேர்ந்து நன்றாக வறுத்து பொடி செய்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, ஒரு வாணலில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கவும்.
அதன்பிறகு அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், ஆகியவற்றை சேர்த்து நன்றாக வணக்கவும்.
வெங்காயம் நன்றாக வணங்கியதும் அதில், தக்காளி சேர்த்து நன்றாக கிளரவும். இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், குழம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொத்தமல்லி இலை நன்றாக கிளரவும்.
இந்த கலவை நன்றாக தயாரானவுடன், அதில் புளி கரைசலை சேர்க்கவும். இந்த கரைசல் கொதித்தவுடன், அதில் வறுத்து தயார் செய்து வைத்துள்ள வெந்தய பொடியை சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக கொதித்தவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவையான வெந்தய குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “