இந்த கோடைக்காலம் முடிவதற்குள், உங்கள் வீட்டில் வேறு காய்கறிகள் இல்லாதபோது, சுவையான தர்பூசணி பச்சடி அல்லது கூட்டு செய்து பாருங்கள். இது வித்தியாசமான சுவையுடன், தர்பூசணியின் நன்மைகளை இருமடங்கு அளிக்கிறது. சரும ஆரோக்கியம் முதல் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது வரை எண்ணற்ற பலன்கள் இதில் உள்ளன. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி (நறுக்கியது)
கடலை எண்ணெய்
வெங்காயம் (நறுக்கியது)
தக்காளி (சிறியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் (இரண்டாக கீறியது)
உப்பு
பாசிப்பயறு (வேகவைத்தது)
தேங்காய் (துருவியது)
பூண்டு (2 பல்)
சீரகம்
கொத்தமல்லி
கடுகு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
வெந்தயம்
செய்முறை:
ஒரு கடாயில் கடலெண்ணெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி, மற்றும் இரண்டு பச்சை மிளகாயை கீறிச் சேர்க்கவும்.அத்துடன் நறுக்கிய தர்பூசணி மற்றும் உப்பு சேர்த்து, 10-15 நிமிடங்கள் வேக விடவும்.
இதற்கிடையில், பாசிப்பயறை 4 விசில் வைத்து வேகவைத்து, நன்கு மசித்துக்கொள்ளவும். வேகவைத்த பாசிப்பயறுடன், வேகவைத்த நீரையும் கலந்து, மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
https://www.instagram.com/reel/DK3TRkPpEjE/?utm_source=ig_web_copy_link
இப்பொழுது, மிக்சர் ஜாரில் தேங்காய், இரண்டு பூண்டு பற்கள், சீரகம் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும். தர்பூசணி கலவை 80% வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லியை நறுக்கிப் போடவும். தாளிப்பிற்கு: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கூட்டின் மேல் சேர்க்கவும்.