புரோட்டீன், ஃபைபர் நிறைந்த அரிசி இதுதான்: சுகர் பேஷன்ட்ஸ் இந்த முறையில் சாப்பிடுங்க!
மற்ற நெற்கதிர்களை போல் இல்லாமல் காட்டுயானம் நெல்லின் நெற்கதிர்கள் 6 முதல் 7 அடி உயரம் வளரக்கூடியவை. மற்ற அரிசியுடன் ஒப்பிடும்போது காட்டு யானம் அரிசியில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை சர்க்கரை நோய். உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தாலும், அதிகமானாலும் அதனை சர்க்கரை நோய் என்று குறிப்பிடுவார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கொடுப்பார்கள்.
Advertisment
அதேபோல் பாரம்பரிய அரிசி வகைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து, மருத்துவர் சிவபிரகாஷ் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று காட்டுயானம் அரிசி.
மற்ற நெற்கதிர்களை போல் இல்லாமல் காட்டுயானம் நெல்லின் நெற்கதிர்கள் 6 முதல் 7 அடி உயரம் வளரக்கூடியவை. மற்ற அரிசியுடன் ஒப்பிடும்போது காட்டு யானம் அரிசியில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. நமது உடலில் எலும்புக்கு வலு சேர்க்க மெக்னீசியம் அவசியம். அதிகமான புரோட்டின் சத்து கொண்ட அரிசியாக இருக்கும் காட்டுயானம் அரிசியில், அமிலோஸ் சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை உயர்த்தும் திறன் மிக மிக குறைவு. மேலும், இந்த அரிசியில் ஆன்டிஆக்ஸிட்கள் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும்.
பொதுவாக நோய் பாதிப்பை குறைக்கும் வகையில், பாரம்பரிய அரிசியை கஞ்சியாக வைத்து சாப்பிடுவார்கள். எவ்வளவு தான் சத்தான அரிசியாக இருந்தாலும், அதை கஞ்சியாக வைத்து சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் எந்த அரிசியையும் கஞ்சியாக வைத்து சாப்பிடாமல் சாதமாக வடித்து சாப்பிடுவது அதிக நன்மைகளை கொடுக்கும். ஒரு அரியில் சர்க்கரை குறையும் திறன் இருக்கிறதா என்பதை விட, அந்த அரிசியை சாப்பிடும்போது சர்க்கரை வேகமாக அதிகரிக்காமல் இருக்கிறதா என்பதை பார்ப்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“