மனித உடல் ஆரோக்கியத்திற்கு, உணவு ஒரு இன்றியமையாத தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர். சாதாரணமாக கிடைக்கும் கீரைகளில் இருக்கும் சத்துக்கள் நாம், அதிக விலை கொடுத்து வாங்கும் காய்களில் கூட இருக்காது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு கீரைகளில் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான உணவு.
Advertisment
உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கீரைகளில் தான் அதிகம் இருக்கிறது. அந்த வகையில் முருங்கை கீரைக்கு, இதில் முக்கிய பங்குண்டு. மற்ற கீரைகளை விடவும், அதிக சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கை கீரையை, கடைந்தோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிடலாம். குறிப்பாக, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை கீரை ஒரு முக்கிய மருத்துவ நன்மைகளை கொடுக்கும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில், உணவுடன், முருங்கை கீரை சூப் சாப்பிட்டு வரும்போது, உடலில் ரத்த அழுத்தம் சீராகி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கேரட்டை விடவும் பலாயிரம் மடங்கு கண்ணுக்கு நன்மை தருவது முருங்கை கீரை. இந்த கீரையை, வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக வேக வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு. அதன்பிறகு கீரையை கடைந்தோ, அல்லது மிக்ஸியில் வைத்து அறைத்தோ அந்த தண்ணீரில் சேர்த்து சூப்பாக குடிக்கலாம்.
Advertisment
Advertisement
இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சூப்பை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் இந்த சூப் செய்யும்போது சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளும்போது கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.