உடல் எடையைக் குறைப்பதற்கான இயற்கையான ஏழு பொருட்களைப் பயன்படுத்தி, கொழுப்பைக் கரைக்கும் கருப்புக்கவுனி கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம். அந்தக் காலத்தில் மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த, இன்றும் பல்வேறு ஆரோக்கிய பலன்களைக் கொண்ட கருப்புக்கவுனி அரிசி, இந்த கஞ்சியின் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நம் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற பார்லி உதவுகிறது.
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு, மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை கொண்ட கொள்ளு ஆகியவையும் இந்தக் கஞ்சியில் சேர்க்கப்படுகின்றன. இந்த மூன்று பொருட்களும் நம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
செய்முறை:
இந்த பொருட்கள் அனைத்தையும் முதலில் தூசி போகும் அளவுக்கு தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின்னர், அவற்றை வெயிலில் அல்லது ஒரு நல்ல நிழலான இடத்தில், மொறுமொறுவென சத்தம் வரும் அளவுக்கு மூன்று நாட்கள் நன்றாகக் காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு, இந்தப் பொருட்களை ஒரு கடாயில் மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வறுக்கும்பொது அதனுடன் மிளகு சீரகம் சேர்க்க வேண்டும்.
வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு மெல்லிய மாவாக அரைத்துக்கொள்ளுங்கள்.ஒரு தனி கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அதில் பூண்டு சேர்த்து வதக்கி, அதையும் சேர்த்து மாவாக அரைத்து அந்த மாவை ஒரு மண் சட்டியில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இந்தக் கஞ்சி்கு தேவையான அளவு எடுத்து, தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, கலவை கொதிக்க ஆரம்பித்து, கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
உங்கள் உடல் எடை குறைக்கும் கருப்புக்கவுனி கஞ்சி மிக்ஸ் இப்போது தயார். கருப்புக்கவுனி கஞ்சியில் சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களுமே சத்தானவை மற்றும் விலை உயர்ந்தவை. சரியான அளவில் சேர்த்துச் செய்யும்போதுதான் கஞ்சி சரியான பதத்திலும், சுவையிலும் கிடைக்கும். இந்தக் கஞ்சியைத் தினமும் எடுத்துக்கொள்வது உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்திற்கு பெரிதும் உதவும்.