அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உணவு... பி. பி மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க: டாக்டர் பிள்ளை யோசனை

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும் 5 உணவுகளை டாக்டர் பிள்ளை பட்டியலிட்டுள்ளார். இந்த உணவுகளை சாப்பிடும்போது, இரத்த அழுத்தம் மிகச் சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும் 5 உணவுகளை டாக்டர் பிள்ளை பட்டியலிட்டுள்ளார். இந்த உணவுகளை சாப்பிடும்போது, இரத்த அழுத்தம் மிகச் சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

author-image
WebDesk
New Update
blood pressure

இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் (High BP) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) என்று இரண்டு வகைகள் இருந்தாலும், பொதுவாக உயர் இரத்த அழுத்தம்தான் ஒரு நோயாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் இரத்த அழுத்தம் குறைந்து பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

Advertisment

அந்த வகையில் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும் 5 உணவுகளை டாக்டர் பிள்ளை பட்டியலிட்டுள்ளார். இந்த உணவுகளை சாப்பிடும்போது, இரத்த அழுத்தம் மிகச் சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த விஷயங்கள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ளவும். அப்படியான அந்த ஐந்து உணவுகள் என்னென்ன என்று பார்ப்போமா?

வாழைப்பழம்

வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலில் சோடியமும் பொட்டாசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. உடலில் சோடியம் அதிகமாக இருக்கும்போது, நீர் தேக்கம் (Water Retention) என்ற பிரச்சனை ஏற்படும். அதாவது, உடலில் அதிகப்படியான நீர் சேரும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் உள்ள பொட்டாசியம்  சிறுநீரகங்களை (Kidneys) தூண்டி, அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றி, சோடியத்தின் அளவைக் குறைத்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து நம்மைக் காப்பாற்றுகிறது. எனவே, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். 

Advertisment
Advertisements

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் பாலிஃபீனால்கள் (Polyphenols), மெக்னீசியம் (Magnesium), மற்றும் ஃப்ளவனால்கள் (Flavanols) அதிக அளவில் உள்ளன. இவை அனைத்தும் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது உடலில் நைட்ரஸ் ஆக்சைடை (Nitrous Oxide) அதிகரித்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நைட்ரஸ் ஆக்சைடு என்பது சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்று அழைக்கப்படும். இது இரத்த நாளங்களின் செல்களை ரிலாக்ஸ் செய்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் கரிம நைட்ரேட்டுகள் (Organic Nitrates) அதிக அளவில் உள்ளன. இவை உடலுக்குள் சென்றதும், உடல் அவற்றை நைட்ரஸ் ஆக்சைடாக மாற்றுகிறது. ஏற்கனவே, நைட்ரஸ் ஆக்சைடு அதிகரிக்கும்போது இரத்த அழுத்தம் குறையும்.

மாதுளம்பழம்

மாதுளம்பழம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது உடலில் ரெனின்-ஆஞ்சியோடென்சின் சிஸ்டம் (Renin-Angiotensin System) என்று ஒன்று உள்ளது. சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு இடையேயான தொடர்பில் இந்த சிஸ்டம் முக்கியப் பங்காற்றுகிறது. மாதுளம்பழத்தை அதிகமாகச் சாப்பிடும்போது, இந்த சிஸ்டத்தில் உள்ள என்சைம்களின் செயல்பாட்டைக் குறைத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

இஞ்சி

இஞ்சி ஒரு முக்கியமான மருத்துவப் பொருள் என்பது உங்களுக்குத் தெரியும். இஞ்சி ஒரு இயற்கையான கால்சியம் சேனல் பிளாக்கராக (Natural Calcium Channel Blocker) செயல்படுகிறது. உடலில் கால்சியம் சேனல்கள் ஆக்டிவேட் ஆகும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும், தசைகளின் சுருக்கம் அதிகமாகும். இஞ்சி அந்தக் கால்சியம் சேனல்களைத் தடுத்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது. எனவே, இஞ்சியை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று டாக்டர் பிள்ளை கூறியுள்ளார்.

Foods to maintain healthy blood pressure levels

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: