கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. மேலும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துக்களும் இருக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
Advertisment
கொத்தமல்லி இலை குறித்து மேற்கொள்ளபபட்ட சில ஆய்வுகளில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க கொத்தமல்லி இலைகள் உதவுவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே உட்கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கலாம்.
கொத்தமல்லி இலை செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை குறைக்கவும் உதவுகிறது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து, சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும், இது சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவும், முகப்பருவை குறைக்கவும் உதவும். சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை பல நன்மைகளை உள்ளடக்கியது.
Advertisment
Advertisements
இந்த கொத்தமல்லி இலையில் சட்னி செய்து சாப்பிடலாம். ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம், தக்காளி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வணக்கி, அதன்பிறகு, கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கவும். இறுதியாக தேவையான அளவு உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து இறக்கி ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான மல்லி சட்னி தயார். இந்த சட்னி இட்லி, தோசைக்கு சிறந்த உணவாக இருக்கும். சருமத்தை பாதுகாக்கவும் உதவும்.