/indian-express-tamil/media/media_files/2024/12/28/fL60sGQMY6NcaZK9zDnB.jpg)
ஆட்டுக்கறி யார் சாப்பிடலாம்? கொழுப்பு இருக்கிறவர்கள் ஆட்டுக்கறியை சாப்பிடலாமா? எந்தெந்த பாகத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பது குறித்து டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
பொதுவாக ஆட்டுக்கறி சாப்பிடுவர்கள், தங்கள் உடம்பில் ரத்தம் அதிகமாக ஊற வேண்டும் என்று அதன் சுவெரொட்டியை சாப்பிட விரும்புவார்கள். ஆட்டில் இருக்கும் அனைத்து பாகங்களும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது என்றாலும் கூட இந்த சுவரொட்டி மிக மிக நன்மை தரும் என்ற கருத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆனால், இந்த சுவரொட்டியை விட, ஆட்டின் இந்த பாகத்தில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
ஆட்டுக்கறி சாப்பிட்டால், மாரடைப்பு வரும் என்ற நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. ஆட்டுக்கறியில் இரும்புச்சத்துக்காக நாம் சாப்பிடக்கூடியது ஈரல். இதில் இரு வகைகள் உள்ளது. கல்லீரல், மண்ணீரல் என்று இருக்கிறது. இதில் மண்ணீரலை தான் சுவரொட்டி என்று சொல்வார்கள். பொதுவாக இந்த ஈரலை இரும்புச்சத்துக்காத்தான் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த இரும்புச்சத்து ஆட்டின் சுவரொட்டி என்று சொல்லக்கூடிய மண்ணீரலை விட, கல்லீரலில் தான் அதிக இரும்புச்சத்து இருக்கிறது,
85 கிராம் ஈரல் எடுத்தால் அதில் 135 கலோரிகள் தான் இருக்கிறது, அதே சமயம், ஆட்டு கறியை விட, ஈரலில், கொழுப்புச்சத்து சற்று கூடுதலாக இருக்கிறது. அதேபோல் செரிவூட்டப்பட்ட கொழுப்பு 2.1 கிராம் அதிகமாக உள்ளது. ஆனால் அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவைப்படக்கூடிய கொழுப்பில் இது கொஞ்சம் தான். அதேபோல் ஆட்டு கறியை விடவும், ஈரலில் புரதம் சற்று குறைவாக இருக்கிறது. இருந்தாலும் ஆரோக்கியமான அளவில் தான் இருக்கிறது. இந்த ஈரலில் இரும்புச்சத்து 4.9 மில்லி கிராம் அளவில் இருக்கிறது.
ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 62 சதவீதம், ஆட்டு ஈரலில் உள்ளது. ரொம்ப முக்கியமான ஆட்டின் கல்லீரலில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது. வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்கள் வாரம் ஒருமுறை 85 கிராம் ஆட்டு கல்லீரல் சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி12 சத்து கிடைக்கும். நமது அன்றாட வாழ்க்கயைில் வைட்டமின் பி12 எவ்வளவு நமக்கு தேவையோ அதைவிட 24 மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.