இன்றைய காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. மாறி வரும் உணவு பழக்க வழங்கக்ஙகளும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் வயதுக்கேற்ற எடையை விட அதிகமாக உடல் எடை அதிகமாகி அதனை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
Advertisment
கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்களால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட ஜூஸ், மில்க் ஷேக், கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்துவது, போதுமான நார்ச்சத்து மற்றும் புரதம் இல்லாத உணவுகளை உண்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
உட்கார்ந்தே இருக்கும் வேலை, போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்றவை உடலில் கொழுப்பைச் சேமிக்க வழிவகுக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிலர் உணர்ச்சிவசப்பட்டு அதிகமாகச் சாப்பிடலாம். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். போதுமான தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து, எடை அதிகரிப்பைத் தூண்டும்.
இப்படி உடல் எடை அதிகமாக இருக்கும்போது அதை குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்த எளிமையான செயல்முறையை டாக்டர் பிள்ளை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ள வீடியோவில், இரவில் தூங்க செல்லும் முன், சுடு தண்ணீரில், கொஞ்சம் எலுமிச்சை சாறு, மற்றும் தேன் கலந்துகுடித்து விட்டு படுக்கலாம். இது சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், மஞ்சள் பால் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
அதாவது நன்கு வடிகட்டிய பாலில் ஆடை எல்லாம் எடுத்துவிட்டால் அதில் இருந்து கொழுப்பு போய்விடும். அதன்பிறகு தில் கொஞ்சம் மஞ்சள் பொடி தூவி அந்த பாலை குடித்தால் ஹெல்த்துக்கு நல்லது. அதனுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு படுக்கலாம். தண்ணீர் எதற்கு எனறால், உங்களுக்கு அல்சர் கம்ப்ளைன்ட் வராமல் தடுப்பதற்கு தண்ணீர் உதவும் என்று டாக்டர் பிள்ளை கூறியுள்ளார்,