அலுவலகங்கள் செல்லும் நபர்கள், மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் மதிய உணவு எடுத்து செல்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தினகமும் ஒரே மாதிரியாக உணவை கொடுத்தால் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதனால் ஒருநாள் இப்படி வித்தியாசமாக அதே சமயம் ஆரோக்கியமான அவரை சாதம் செய்துகொடுங்கள். எப்படி செய்வது தெரியுமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
வெங்காயம் – 2
அவரைக்காய் – 100 கிராம்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன’
உப்பு தேவையான அளவு
வடித்த சாதம் – ஒரு கப்
முட்டை – 2
மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அவரைக்காயை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயம், அவரைக்காய் சேர்த்து கிளறிவிட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அவரைக்காய் வெந்தவுடன், அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டை காயுடன் கலக்குமாறு கிளறவும். அடுத்து வடித்த சாதத்தை சேர்த்து, கிளறவும். அடுத்து மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக கரம் மசாலா சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான அவரைக்காய் சாதம் ரெடி. நீங்களும் ட்ரைப் பண்ணி பாருங்க.