மழை காலகங்களில் பொதுவாக பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சளி, இருமல் தொல்லை. குறிப்பாக வறட்டு இருமல் வந்துவிட்டால், பெரிய தொநதரவாக இருக்கும். இதனை தடுக்க என்ன செய்வது என்று பலரும் பல வழிகளில் அதற்கான தீர்வை தேடுவார்கள். வைரஸ் தொற்றுகள் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தி வறட்டு இருமலை உண்டாக்கும்.
Advertisment
அதேபோல், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இரவில் மூச்சுக்குழாய் சுருங்குவதால் இருமல் அதிகமாக இருக்கலாம். வயிற்றில் இருந்து அமிலம் உணவுக்குழாய்க்குள் திரும்புவது தொண்டையை எரிச்சலூட்டி இருமலை ஏற்படுத்தும். படுக்கும்போது இது இன்னும் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சளியை உற்பத்தி செய்யாத ஒரு வகை இருமல். இது தொண்டை அல்லது காற்றுப்பாதைகளில் ஏற்படும் எரிச்சலால் ஏற்படுகிறது.
வறட்டு இருமல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளால் தூண்டப்படலாம். சளி அல்லது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகள் வறட்டு இருமலுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். தொற்று நீங்கிய பிறகும் இந்த இருமல் சில வாரங்கள் வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த வறட்டு இருமலை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து, டாக்டர் ஜெயரூபா கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
வறட்டு இருமல் அதிகம் இருக்கிறது என்றால், வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். தேன் தொண்டையை ஆற்றவும் இருமலைக் குறைக்கவும் உதவும். ஒரு தேக்கரண்டி தேனை அப்படியேவும் சாப்பிடலாம். அடுத்து மிளகுடன் 4-5 அரிசி சேர்த்து நன்றாக மென்று அதன் சாறு உள்ளே இறங்குவது போல் செய்தால், வறட்டு இருமல் குணமாகும். இதில் மிளகுக்கு பதிலாக அரிசியை கிராம்புடன் சேர்த்து மென்று அதன் சாற்றை குடிக்கலாம். கிராம்புவை வாய்க்குள்ளே வைத்திருந்தாலும் வறட்டு இருமல் சரியாகும்.
மிளகு, கிராம்பு, தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் இவை அனைத்தும், சுவாசப்பகுதியில் உள்ள தொற்றுகளை நீக்கவும் உதவுகிறது என்று டாக்டர் ஜெயரூபா கூறியுள்ளார்.