இட்லி, ராகி தோசை, ஓட்ஸ்... சுகர் நோயாளிகளுக்கு பெஸ்ட் காலை உணவு; இதுல ஒண்ணு தான் சாப்பிடணும்: டாக்டர் பிள்ளை
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், அதிகமான பசி உள்ளிட்ட பல அறிகுறிகள் சர்க்கரை நோய்க்கு உள்ளன. இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், அதிகமான பசி உள்ளிட்ட பல அறிகுறிகள் சர்க்கரை நோய்க்கு உள்ளன. இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உடலில் இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாததால் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாததால் இரத்தத்தில் சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவு அதிகமாகும் நிலை நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி என்று சொல்லாம். இது ஒரு நாள்பட்ட நோயாகும். இது சரியான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால், பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
Advertisment
சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளன. அதேபோல் கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு தற்காலிகமாக ஏற்படும் நீரிழிவு நோயாகும். பிரசவத்திற்குப் பிறகு இது பொதுவாக மறைந்துவிடும், ஆனால் இந்த பெண்களுக்கு பிற்காலத்தில் வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், அதிகமான பசி உள்ளிட்ட பல அறிகுறிகள் சர்க்கரை நோய்க்கு உள்ளன. இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டிய 3 உணவுகளை டாக்டர் பிள்ளை பட்டியலிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரேக்பாஸ்டக்கு மூணு ஆப்ஷன் தரேன். இதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆப்ஷன் வச்சு நீங்க ரொட்டீனா ஃபாலோ பண்ணிட்டு வரலாம். ஆப்ஷன் ஒன் இரண்டு இட்லி அது கூட நல்லா நிறைய காய் போட்டு வச்ச சாம்பார். சட்னி தேவையில்லை. வேண்டும் என்றால், கொஞ்சமாக தொட்டுக்கலாம். இது ஆப்ஷன் ஒன்னு.
Advertisment
Advertisements
ஆப்ஷன் இண்டு தோசை. சாதா தோசை இல்லை. ராகி தோசை சாப்பிடலாம். ராகி உங்களுக்கு தெரியும். அதில் புரோட்டீன், ஃபைபர் எல்லாமே நிறைய இருக்கு. தினமும் இரண்டு ராகி தோசை சாப்பிடுங்க. அதுக்கு சைடிஷ் நிறைய காய் போட்டு வச்ச சாம்பார் இல்லன்னா கொஞ்சம் பொடி அந்த மாதிரி ஏதாவது நீங்க தொட்டுக்கலாம். மூன்றாவது ஆப்ஷன் பாத்தீங்கன்னா ஓட்ஸ் உப்புமா. ஓட்ஸ் நீங்க உப்புமா மாதிரி பண்ணி சாப்பிடலாம். இல்லனா ஓட்ஸ் கஞ்சியாவும் சாப்பிடலாம். அது கூட கொஞ்சம் சாலட் மிக்சட் வெஜிடபிள்ஸ் சாலட் சாப்பிடலாம். இந்த மூணு ஆப்ஷனையும் மாத்தி மாத்தி நீங்க பிரேக்ஃபாஸ்ட்ட்க்கு சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.