இளம் வயதில் நரைமுடி? வாரத்தில் 3 முறை இப்படி மஜாஜ்; அப்பறம் இந்த உணவுகள் எடுங்க: சொல்லும் டாக்டர் நித்யா

முடிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். உடலில் நியூட்ரிஷன் சத்து அதிகமாகும்போது இளநரை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கும்.

முடிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். உடலில் நியூட்ரிஷன் சத்து அதிகமாகும்போது இளநரை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கும்.

author-image
WebDesk
New Update
white hair

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை இளநரை. இளமையில் இந்த பிரச்னையை சந்திக்கும் பலரும் கடுமையான மள உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். இதனால் இதில் இருந்து மீண்டுவர என்ன வழி என்பது குறித்து பல இடங்களில், சமூகவலைதளங்கள் உள்ளிட்ட பல வழிகளை தேடி செல்கின்றனர். ஆனால் இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என்பது குறித்து டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Advertisment

இளநரை பிரச்னைக்கு முக்கிய காரணம் உணவுமுறைகள் என்று சொல்லலாம். ஜங்புட் அதிகம் சாப்பிடுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இளநரையுடன் சேர்த்து முடி உதிர்வு பிரச்னையும் நிறைய இருக்கிறது, இந்த பிரச்னையில் இருந்து விடுபட முதலில், முடிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். உடலில் நியூட்ரிஷன் சத்து அதிகமாகும்போது இளநரை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கும்.

இந்த இளநரையை போக்க, நியூட்ரிஷன் சத்துக்கள் நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டு, வாரம் 3 முறை ஹெட் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க தொடங்கும். இளநரையும் கொஞ்சம் கொஞ்சமாக தடுக்கப்படும். அதேபோல் முன்னோக்கி தலையை குணிந்து 2-3 நிமிடங்கள் நிற்கும்போது ஸ்கெல்க்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க தொடங்கும். கால்சியம் மெக்னீசியம், ஜிங்க் இவை அனைத்தும் நம் உணவில் அதிகமாக இருக்கும்போது, தலைமுடி உதிர்வு இளநரை பிரச்னை வராது.

Advertisment
Advertisements

சத்துமாவு கஞ்சி, முளைக்கட்டிய பயறு வகைகள், எடுத்துக்கொள்ளும்போது ரத்த ஓட்டம் மட்டுமல்லாமல், நமது உடலில் தேவையான அளவு நியூட்ரிஷன் அளவு அதிகரிக்கும். இளநரை பிரச்னையும் தீரும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

Tamil Health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: