/indian-express-tamil/media/media_files/2025/05/25/jOs1CwI3z2ASU2giaDmS.jpg)
கை, கால் நடுக்கம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை, குறிப்பாக வயதானவர்களுக்கு சில நேரங்களில், கை, கால் நடுக்கம், தலை ஆடுவது போன்ற பிரச்னைகள் இருக்கும் ஒரு தீவிரமான மருத்துவ நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதிக மன அழுத்தம் அல்லது பதட்டம் உள்ளிட்ட காரணங்களாலும், கை, கால் நடுக்கம் ஏற்படலாம்.
இது மிகவும் பொதுவான காரணம். கைகள், தலை அல்லது குரலை பாதிக்கலாம். இது செயல்களின்போது மோசமடையும் மற்றும் ஓய்வில் குறையும். இது பரம்பரையாக இருக்கலாம். இதனை தடுக்க மருத்துவ முறைகள் பல இருக்கிறது. நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் கூட இந்த கை, கால் நடுக்கம் ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தி செய்யும்போது நடுக்கம் ஏற்படலாம்.
அதேபோல், பக்கவாதம் அல்லது மூளை காயம் காரணமாக மூளையின் சில பகுதிகள் சேதமடைந்தால் நடுக்கம் ஏற்படலாம். இந்த கை,கால் நடுக்கத்தை போக்குவதற்காக, டாக்டர், சி.கே. நந்தகோபாலன் ஒரு வழியை கூறியுள்ளார். கோவைக்காய் 4-5 எடுத்துக்கொண்டு, அதனை, துண்து துண்டுகளாக நறுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீர் 250 எம்.எல்.ஆகும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அதன்பிறகு அந்த தண்ணீரை எடுத்து காலை மாலை என 2 வேளையும் குடித்து வர வேண்டும். குறிப்பாக கோவக்காயை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதன் மருத்துவ தன்மை போய்விடும் என்று கூறியுள்ளார்.
கோவக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கோவக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், பீட்டா கரோட்டின் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
கோவக்காயை பச்சையாக சாப்பிடுவது அல்லது அதன் இலையை அரைத்து சாப்பிடுவது வயிற்றுப் புண்ணை ஆற்றும். கோவக்காய் இலைகள் தோல் நோய்கள், ஆறாத புண்கள், சிரங்கு மற்றும் அரிப்பு ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச் சாறு சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது என்றும் தகவல்கள் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.