/indian-express-tamil/media/media_files/2025/05/12/AbYpktA178mIUux21J4H.jpg)
குதிகால் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் அல்லது மென்மை இழந்த நிலைதான குதிகால் வலி என்று சொல்வார்கள். பொதுவாக காலில் உள்ள கட்டமைப்புகளில் வீக்கம் அல்லது காயத்தால் ஏற்படுகிறது. குதிகால் வலி லேசானது முதல் கடுமையானது வரை பல லேயர்களில் இருக்கலாம், மேலும் இது ஒரு கூர்மையான அல்லது மந்தமான வலியாக உணரப்படலாம். சில நேரங்களில், நடக்கும்போது அல்லது ஓடும்போது குதிகால் வலி அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த திசுப் பட்டையின் வீக்கம். இது குதிகால் எலும்பிலிருந்து கால்விரல்கள் வரை செல்கிறது. எலும்பின் அடிப்பகுதியில் உருவாகும் ஒரு சிறிய எலும்பு வளர்ச்சியும் இதற்கு காரணமாக இருக்கலாம். அதேபோல், குதிகாலின் பின்புறத்தில் உள்ள அகில்லெஸ் தசைநார் வீக்கமும் குதிகால் வலிக்கு காரணமாக இருக்கலாம். குதிகால் பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தம் அல்லது எரிச்சலால் பாதிக்கப்படலாம்.
இந்த குதிகால் வலியை கட்டப்படுத்த டாக்டர் நித்யா ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளார். அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், குதிகால் வலிக்கு கல் உப்பை பயன்படுத்தலாம். இந்த கல் உப்பை மண் சட்டி, அல்லது, இரும்பு வாணலில் வறுத்துவிட்டு, சூடாக இருக்கும்போது ஒரு வெள்ளை துணியில் உப்பை எடுத்து, குதிகாலில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி ஒத்தடம் கொடுக்கும்போது அந்த வலிக்கு இந்த சூடு இதமாக இருக்கும்.
அதேபோல் ஆமணக்கு இலைகளை எடுத்துக்கொண்டு நல்லெண்ணெய் அல்லது ஆமணக்க எண்ணெயில் வதக்கி, அந்த இலை சூடானவுடன், அந்த இலையை எடுத்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். அதேபோல் குதிகால் வலிக்கு முக்கிய நன்மை கொடுப்பது எருக்கை இலை தான். இந்த இலைகளை நோடியாக சூடாக்கி வலி இருக்கும் இடத்தில் வைத்தால், நல்ல பலன் கிடைக்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.