ஒவ்வொரு உயிரினத்திற்கும் உடலில் சரியான அளவில் ரத்தம் இருக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு, மாதவிடாய் நிகழ்வு இருப்பதால், அவருக்கு அதிகப்படியான ரத்தம் இருக்க வேண்டும். உடலில் ரத்த்த்தின் அளவு குறையும்போது, ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதனால் உடலின் ரத்த அளவை சீராக வைத்திருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரத்த்த்தின் அளவை சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
Advertisment
பிரசவத்தின்போது அவர்களுக்கு அதிகமான ரத்தம் இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு சோதனை செய்வது வழக்கம். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தத்தின் அளவும் குறையும். உடலில் ரத்தத்தை அதிகரிக்க, ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க, ஆட்டு இறைச்சியின் இந்த பகுதியை சாப்பிடலாம். அதுதான் ஆட்டின் சுவரொட்டி. உள்ளங்கை அகலம் இருக்கும் இந்த சுவரொட்டி உடலின் ரத்த அளவை அதிகரிக்கும்.
இதை எப்படி சமைப்பது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
ஆட்டு சுவரொட்டி – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
வெங்காயம் – 2
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டு சுவரொட்டியை கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு, அதில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு அந்த சுவரொட்டி மீது உள்ள கொழுப்பை கத்தியை வைத்து நீக்க வேண்டும்.
அடுத்து வேகவைத்த சுவரோட்டியை துண்டு துண்டாக நறுக்கி எடுத்துக்கொண்டு, ஒரு கடாயை அடுப்பில், வைத்து எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து தாளித்துவிட்டு, அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிவிட்டு, நறுக்கி வைத்துள்ள சுவரொட்டியை அதில் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஆட்டு சுவரோட் ப்ரை ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.