குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டியது அவசியம். குறைந்தது 6 மாதங்களாகவது குழந்தைகள் தாய்பால் தவிர வேறு எதுவும் சாப்பிட கூடாது. குழந்தை எந்த அளவுக்கு தாய் பாலை உணவாக எடுத்துக்கொள்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைகள் ஆரோக்கியம், அதிகரித்து நோய் தாக்கங்கள் குறைய வாய்ப்பு இருக்கும்.
Advertisment
இதன் காரணமாக, தாய் மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் தாய் பால் கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு, தொடக்கத்தில் தாய் பால் அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் தாய் பால் சுரப்பை அதிகரிக்க, அதற்கு ஏற்றார்போல் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், தாய்மார்களுக்கு தாய் பால் அதிகரிக்க, பூண்டு பெரிய அளவில் உதவி செய்கிறது. இதனால் குழந்தை பெற்றடுத்த தாய்மார்களுக்கு முதலில் பூண்டு உணவு அதிகம் கொடுப்பார்கள்.
மேலும் தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் வகையில் பல உணவுகள் இருக்கிறது. இந்த உணவுகள் குறித்து, டாக்டர் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தாய் பால் அதிகரிக்க உதவும் 5 உணவுகளை பட்டியலிட்டுள்ளார். அதில் முதலில் சொல்வது பூண்டு தான். வெள்ளம் மற்றும் நெய்யில் சேர்த்து வறுத்த பூண்டு, தினமும் 2-3 பூண்டுகள் எடுத்துக்கொள்வது தாய்பால் சுரப்பை அதிகரிக்கும்.
அடுத்து ஓட்ஸ். ஒரு நாளைக்கு, 1-2 கப் ஓட்ஸ் எடுத்துக்கொண்டால், காலை உணவாகவும் இருக்கும். அதே சமயம் தாய்பால் சுரப்பும் அதிகரிக்கும். அடுத்து தண்ணீர். பலரும் பால் குடித்தால் தான் அதிக பால் சுரக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தண்ணீர் அதிகம் குடித்தாலே தாய் பால் அதிகம் சுரக்கும். 4-வது டிப்ஸ் கொதிக்கும் தண்ணீரில், சோம்பு, சீரகம், ஓமம் போட்டு, கொதிக்க வைத்து இந்த தண்ணீரை குடித்து வந்தால் தாய் பால் சுரப்பு அதிகமாகும். 5-வது டிப்ஸ் இளநீர் மற்றும் மோர் குடித்தால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
எப்போதெல்லாம் உங்களுக்கு தாகம் எடுக்கிறதோ அப்போது இளநீர் அல்லது மோர் குடிக்கலாம். உங்களுக்கு சுகர் பிரச்னை இல்லை என்றால் மட்டும் இளநீர் எடுத்துக்கொள்ளவும் என்று டாக்டர் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.