/indian-express-tamil/media/media_files/2025/04/12/hMkNgXARmMr85FRgFdO8.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இரு நோய்களும் உடலில் ஏற்படும்போது சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து டயாலஸிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிகமான ரசாயன உரம் சேர்த்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானிய வகைகளை சாப்பிடும்போது, ரத்தத்தில் நஞ்சுகள் தங்க ஆரம்பிக்கும்.
இதன் காரணமாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
ஒரு நபருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு வாரத்திற்கு 2-3 முறை டயாலஸிஸ் செய்ய வேண்டும். அடிக்கடி நுரையீரலில் தண்ணீர் தேங்கக்கூடிய ஒரு வாய்ப்பும் ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய தொடங்கும். இந்த மாதிரி, சிறுநீரகத்தை பாதிக்கும் நோய்கள், ஒருவரின் வாழ்க்கையின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். இதற்கு தீர்வாக இயற்கையில் கிடைக்கும் ஒரு தாவரத்தை பயன்படுத்தலாம் என்று டாக்டர், ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
அந்த தாவரத்தின் பெயர் பூனை மீசை. வேப்பிலை மாதிரி இருக்கும் இந்த தாவரம் மலைப்பாங்கான இடத்தில் அதிகம் வளரக்கூடியது. பாம்பு கடியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மலைவாழ் மக்கள் இதனை பயன்படுத்தி வந்துள்ளனர். சிறுநீரக கோளாறு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் தனியாக பிரிந்து வெளியேற தொடங்கிவிடும். இதனை தடுக்க, பூனை மீசை என்ற இந்த மூலிகை தாவரம் உதவி செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுவை வெளியேற்றுவது, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருவது போன்ற செயல்களுக்கும் இம்மூலிகை பயன்படுகிறது.
சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை வெளியேற்றவும் இந்த பூனை மீசை மூலிகை பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் யூரிக் ஆசிட்டை சரியான அளவில் வைத்திருக்கும். 200 எம்.எல்.தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துவிட்டு, அதில், 20 பூனை மீசை இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி டீ மாதிரி குடிக்கலாம். இந்த மூலிகை பவுடராக கிடைக்கிறது என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் அளவில், எடுத்து 200 எம்.எல். தண்ணீரில் சேர்த்து, கொதிக்க வைத்து குடிக்கலாம். இதை தினசரி ஒரு வேளை எடுத்துக்கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.