உடலில் சிறுநீரக கல் வந்துவிட்டால் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்பது குறித்து, டான்டர் பூஜா தயாளன் கூறியுள்ளார்.
Advertisment
சிறுநீரகங்களில் உருவாகும் திடமான தாதுக்கள் மற்றும் உப்புகளின் படிகங்கள் சிறுநீரக கற்கள் என்று சொல்வார்கள். இவை சிறுநீர்க் குழாய் வழியாக செல்லும்போது கடுமையான வலியை ஏற்படுத்தும். கடுமையான வலி, பொதுவாக முதுகின் கீழ் பகுதியில் அல்லது வயிற்றின் பக்கவாட்டில் தொடங்கி, இடுப்பு மற்றும் தொடை வரை பரவும். இந்த வலி விட்டு விட்டு வரலாம் அல்லது தொடர்ந்து இருக்கலாம்.
உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அடர்த்தியாகி கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிக உப்பு, புரதம் மற்றும் சில கனிமங்கள் கால்சியம், ஆக்சலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். சிறுநீரகக் குழாய் நோய்த்தொற்றுகள், ஹைப்பர்பாராதைராய்டிசம், கீல்வாதம் போன்ற சில மருத்துவ நிலைகள் சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
சில வகையான சிறுநீர் போக்கு மருந்துகள் மற்றும் அமில எதிர்ப்பு மருந்துகள் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த கிட்னி கல்லை எளிதாக கறைப்பதற்கு, வாழைத்தண்டு, முள்ளங்கி, வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம். அதேபோல் சித்தாவில் நீர்முள்ளி கஷாயம், நெரிஞ்சில் முள் கஷாயம், குடிக்கும்போது கிட்னி கல் எளிதாக வெளியில் வந்துவிடும். கல் மிகவும் பெரிதாக இருக்கிறது என்றால், சிலா சத்து, நண்டுக்களி, காமினேஷனில் மோர் அல்லது இளநீரில் சேர்த்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
அதேபோல், கால்சியம் ஆக்சிலேட் உணவுகள், நாம் சாப்பிடும் உணவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், அது சிறுநீரகத்தில் ஃபில்டர் ஆகி ஒரழுங்காக வெளியில் வர முடியாமல், கால்சியம் ஆக்சிலேட் கல்லாக மாறிவிடும். இதனால் கால்சியம் ஆக்சிலேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். கீரைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் கால்சியம் ஆக்சிலேட் அதிகம் உள்ளது இதனை அதிகம் எடுத்தக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுப்பது உடலுக்கு நல்லது.
தினமும் காலையில், நெல்லிக்காய், அல்லது லெமன் ஜூஸ், எடுத்துக்கொள்ளும்போது கிட்னியில் இருக்கும் கல் தானாக கரைந்து வெளியில் வந்துவிடும். வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது கிட்னி கல் கரைந்துவிடும். முள்ளங்கி, தர்பூசணி, பார்லி கஞ்சி, வாழைத்தண்டு ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது கிட்னி கல் கரையும் என்று கூறியுள்ளார்.