ஈரலை சுத்தி இருக்கும் கொழுப்பை கரைக்கும்... இந்த காய்கறிகளை இனி மிஸ் பண்ணாதீங்க: டாக்டர் உஷா நந்தினி
தக்காளி பழம். இதில் இருக்கும் சல்ஃபர் குளோரின் என இரண்டு உயிர்ச்சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் கல்லீரல் சுற்றி இருக்கும் கொழுப்பு படிவத்தை கரைத்மது வெளியில் தள்ளிவிடும்.
தக்காளி பழம். இதில் இருக்கும் சல்ஃபர் குளோரின் என இரண்டு உயிர்ச்சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் கல்லீரல் சுற்றி இருக்கும் கொழுப்பு படிவத்தை கரைத்மது வெளியில் தள்ளிவிடும்.
உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் முக்கியமானது தான் என்றாலும் கூட, கல்லீரல் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது. வயிற்றின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருக்கும், கல்லீரல், சிவப்பு-பழுப்பு, ரப்பர் போன்ற உறுப்பாகும். கல்லீரல் உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு மற்றும் உடலில் உள்ள பல முக்கியமான செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பது கல்லீரல்.
Advertisment
இந்த கல்லீரல் விலா எலும்புக் கூண்டின் கீழ் நன்கு பாதுகாக்கப்படுகிறது. கொழுப்புகளை ஜீரணிக்க தேவையான பித்தத்தை உற்பத்தி செய்கிறது. அம்மோனியாவை யூரியாவாக மாற்றுகிறது, இது வளர்சிதை மாற்றத்தில் முக்கியமானது. வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமிக்கிறது. குளுக்கோஸை சேமித்து வெளியிடுகிறது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த உறுப்பை பாதுகாக்க ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன உணவுகளை எடுத்தக்கொள்ளலாம் என்று டாக்டர், உஷா நந்தினி கூறியுள்ளார்.
புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய், உள்ளிட்ட நீர் காய்களுக்கு கல்லீரலை பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. அடுத்து வெள்ளரிக்காய் சொல்லலாம். இதில் இருக்கும் டீடாக்ஸிபையிங் ஏஜெணட், உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு. அடுத்து தக்காளி பழம். இதில் இருக்கும் சல்ஃபர் குளோரின் என இரண்டு உயிர்ச்சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் கல்லீரல் சுற்றி இருக்கும் கொழுப்பு படிவத்தை கரைத்மது வெளியில் தள்ளிவிடும்.
Advertisment
Advertisements
தக்காளி சூப், தக்காள் சாலட், சுடு நீரில் சுத்தம் செய்துவிட்டு அப்படியே கூட தக்காளியை சாப்பிடலாம். இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது கல்லீரல் கொழுப்பு நல்லபடியாக குறையும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார்.