விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் இந்தக் கீரை... உங்க வீட்டுல கண்டிப்பா இருக்கும்; இப்படி செய்து சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா

விறைப்புத்தன்மை குறைவாக இருக்கும் ஆண்கள், நைட்ரஸ ஆக்ஸைட் அதிகமாக இருக்கும் பீட்ரூட், மாதுளை, தர்பூசனி ஆகிய படங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

விறைப்புத்தன்மை குறைவாக இருக்கும் ஆண்கள், நைட்ரஸ ஆக்ஸைட் அதிகமாக இருக்கும் பீட்ரூட், மாதுளை, தர்பூசனி ஆகிய படங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Male Erection

பல்வேறு இளைஞர்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கும், ஆண்கள் விறைப்புத்தன்மைக்கு தீர்வு தரும் வகையில் டாக்டர் யோகவித்யா ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Advertisment

தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது. தூக்கத்தில் விந்தணு வெளியேறுகிறது என்பது சாதாரணமாக ஒன்று அல்ல. அதேபோல் விறைப்புத்தன்மை பிரச்னையை பலர் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலரும் இந்த மாதிரி பிரச்னை இருக்குமோ? இருந்தால் இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர். ஆனால், இதை தவிர்க்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிலாம் என்பது குறித்து டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விறைப்புத்தன்மை குறைவாக இருக்கும் ஆண்கள், நைட்ரஸ ஆக்ஸைட் அதிகமாக இருக்கும் பீட்ரூட், மாதுளை, தர்பூசனி ஆகிய படங்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக எடுத்துக்கொண்டால், விறைப்புத்தன்மை பிரச்னை நீங்கும். அதேபோல் கொத்தமல்லி கீரை ஆண்கள் விறைப்புதன்மை பிரச்னைக்கு முக்கிய தீர்வை கொடுக்கும். இந்த கீரையை துவையலாகவோ அல்லது ஜூஸாகவே எடுத்துக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

கொத்தமல்லி கீரை, இஞ்சி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை சேர்த்து, ஒன்றாக அரைத்து குடிக்கும்போது, விறைப்புத்தன்மை அதிகரிக்கும். அதற்கு காரணம் இதில் நைட்ரஸ் ஆக்ஸைட் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

Benefits Of Corianders Leaves

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: