/indian-express-tamil/media/media_files/2025/05/25/WJiGWQR3Ri4r2feWPeoo.jpg)
உடல் ஆரோக்கியமாக இருக்க, நரம்புகள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இதனால் தினமும் நரம்பு ஆரோக்கியத்திற்கான உணவுகளை சாப்பிட வேண்டும். நரம்புகள் வலு பெற. வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கோழியின் ஈரல் போன்ற அசைவ உணவுகள், பால், முட்டை போன்ற பொருட்களில் அதிகம் உள்ளது. மீன் வகைகளான மத்தி, சால்மன், சூரை, கானாங்கெளுத்தி ஆகிய உணவுகளிலும் வைட்டமின் B12 அதிகம் உள்ளது.
அதேபோல், நரம்பு செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து மெக்னீசியம். உலர் பழங்களான பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆனால், கை கால்களில் நடுக்கம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பலரும் குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. 40-45 வயதை கடந்தவர்களுக்கு பொதுவாக இந்த பிரச்னை வரும். இதனை நரம்பு தளர்ச்சி என்றும் சொல்லலாம். நரம்பு தளர்ச்சி இருப்பது ஆண்மை குறைபாடாகவும் இருக்கும்.
லேசான கை நடுக்கம், கண்கள் வறட்சி, மேல் அல்லது கீழ் கண் இமையில் லேசான துடிப்பு, உடலில் ஏதாவது ஒரு பகுதியில் தசைககளில் ஏற்படக்கூடிய ஒரு துடிப்பு, ஒரு பொருளை பிடிக்க முடியாத நிலை, நடக்கும்போது தடுமாற்றம், பேசும்போது குளறுவது, போன்ற அறிகுறிகள் இருந்தால், நரம்பு தளர்ச்சி பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல் இந்த அறிகுறிகள் அனைத்தும் நரம்புகள், பலவீனமாக இருக்கிறது என்பதை குறிக்கும்.
இந்த பாதிப்பை தவிர்க்க, அல்லது குணப்படுத்த, புடலங்காய் முக்கிய நன்மைகளை கொடுக்கும். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல் இதனுடன் அவரைக்காய் சேர்த்து சாப்பிடும்போது, நரம்புகள் வலிமை பெறும். அதேபோல் ஜாதிக்காயும் உடலில் நரம்புகளை வலுப்படுத்தும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. தினசரி உணவில் ஜாதிக்காய் சேர்த்துக்கொள்வது அவசியம்.
ஜாதிக்காயை நெய்யில் வறுத்து நன்றாக காயவைத்து பவுடர் செய்து எடுத்து வைத்தக்கொண்டு பயன்படுத்தலாம். இரவில் ஒரு வெற்றிலை எடுத்துக்கொண்டு அதன் உள்ளே ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.