இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, விந்தணு குறைபாடு. ஆண்மைக்குறைவு. திருமணமான இளைஞர்கள் பலரும் இந்த பாதிப்பினால் அவதிப்பட்டு வரும் நிலையில், திருமண நிலையில் உள்ள ஆண்களும், இந்த பாதிப்பு நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். முன்பு குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவமனை சென்றுகொண்டிருந்த மக்கள் இப்போது குழந்தை வரம் தேடி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
Advertisment
இந்த பாதிப்புகளுக்கு முக்கிய காரணம், அவர்களின் உணவு பழக்க வழங்கங்களும் ஒன்றாக உள்ளது. அதேபோல் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஆண்மைக்குறைவு, விந்தணு குறைபாடு, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் தங்கள் மனைவியும் திருப்திபடுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்த பாதிப்பு உள்ள ஆண்கள், பல்வேறு ஆங்கில மருத்துவத்தை நாடி செல்கின்றனர்.
குறிப்பாக செயற்கை கருத்தரிப்பு மையம், டெஸ்ட்டியூப் பேபி உள்ளிட்ட புதிய டெக்னாலஜி வசதிகளையும் தற்போது அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விந்து முந்துதல், ஆண்மைக்குறைவு, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை நமக்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தீர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் இந்த பிரச்னையை தீர்க்கும் முக்கிய பழமாக இருப்பது தர்பூசனி பழம். இதில் இருக்கும், ஆன்டிஆக்ஸிடன்ட், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும்.
Advertisment
Advertisements
இதில் இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதால், ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு பாதிப்பை தடுக்கும். இதனால் தர்பூசணியை வாரத்திற்க ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். அடுத்து முக்கியமான ஒரு பழம் தான் வாழைப்பழம். குறிப்பாக செவ்வாழைப்பழம் விந்து முந்துதல் மற்றும் விரைப்புத்தன்மை பாதிப்புகளை சீர் செய்ய உதவுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் என்ற ஊட்டச்சத்து அதிகளவில் இருப்பதால், ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் இது நன்மை தரக்கூடியதாக இருக்கிறது என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.