/indian-express-tamil/media/media_files/2025/04/18/c5oY6yQRQ5lUmh2xumrv.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சிறுநீரக கல். சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான தாதுக்கள் மற்றும் உப்புகளின் படிவுகள் தான் சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. இவை மணல் துகள்கள் முதல் கோல்ஃப் பந்து வரை பல்வேறு அளவுகளில் இருக்கலாம். சிறிய கற்கள் வலியை ஏற்படுத்தாமல் சிறுநீர் வழியாக வெளியேறலாம். ஆனால் பெரிய கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து கடுமையான வலியை உண்டாக்கும்.
இந்த சிறுநீரக கல் பிரச்னை உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம். மேலும், சிறுநீரில் தாதுக்களின் அடர்த்தியை அதிகரித்து கல் உருவாக வழிவகுக்கும். அதேபோல், அதிக உப்பு, புரதம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, சில வகையான கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். சிறுநீரகக் குழாய் அமிலத்தன்மை, சிஸ்டினுரியா, ஹைப்பர்பார தைராய்டிசம் மற்றும் அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவது போன்ற சில மருத்துவ நிலைகள் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீரகக் கல் சிறுநீரகத்திற்குள் இருக்கும் வரை பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அது சிறுநீர் குழாய்க்குள் நகரும்போது விலா எலும்புகளுக்குக் கீழே முதுகு அல்லது பக்கவாட்டில் திடீரென கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த வலி வயிற்றின் கீழ் பகுதி மற்றும் இடுப்புக்கு பரவும். ஆண்களுக்கு விதைப்பையில் வலி ஏற்படலாம். வலி, தீவிரத்தில் மாறுபாடு இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படும்.
சிறுநீரில் இரத்தம் வருவது, துர்நாற்றம் வீசும் சிறுநீர். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவது சிறுநீரக கற்கல் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த பிரச்னை தீர்ப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். தினமும் சிறுநீரை அதிகளவு பெருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் தேநீருக்கு பதிலாக நெல்லிக்காய் சாறு, குடிக்கலாம். இப்படி குடிக்கும்போது பித்தப்பையில் கற்கல் ஏற்படாமல் தடுக்கும். சின்ன சின்ன கற்கல் வேளியேறும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.