இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் கடுமையாக மனஉளைச்சலை சந்திக்கும் அவர்கள், உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு நபரின் உடல் எடை அவர்களின் உயரம், வயது, பாலினம் மற்றும் உடல் அமைப்பு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
Advertisment
அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். போதுமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கலாம். சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், நீங்கள் குறைவான கலோரிகளை எரிப்பீர்கள். இது காலப்போக்கில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து, அதிக உணவு உட்கொள்ள வழிவகுக்கும்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க பெரும்பாலான வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கூறியுள்ளார்.
ஒரு நாள் உணவில் 3 டீஸ்பூன் எண்ணெய் தான் சாப்பிட வேண்டும். ஆனால், பலரும் 6-9 டீஸ்பூன் எண்ணெய் சாப்பிடுகிறார்கள். ஒரு கிராம் எண்ணெய் 9 கேலரிக்கு சமம். அரிசி பருப்பு இது எடுத்துக்கொள்ளும்போது 4 கேலரி. இதை விட, எண்ணெய் இருமடங்கு கேலரி அதிகம். ஆனால் எண்ணெய் போட்டால் தான் டேஸ்ட் என்று சொல்லி, எண்ணெய் நிறைய சேர்த்துக்கொள்வார்கள். இதை குறைக்க வேண்டும். அதேபோல் சர்க்கரையையும் குறைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இனிப்பு என்பது எப்பாவது தான் சாப்பிட வேண்டும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தினமும் சாப்பிடம் பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. அப்பளத்தை பொறித்து தான் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடும்போது, காய்கறிகள் உணவில் குறைந்துவிடும். அவ்வாறு காய்கறிகள் குறையும்போது, ஒட்டுமொத்த நியூட்ரிஷன் டென்சிட்டியில் கேலரி தான் அதிகமாக இருக்கும். அதனால் பொறித்த உணவுகளை எப்பவாது ஒருமுறை எடுத்துக்கொள்வது தான் நல்லதே தவிர, அடிக்கடி எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறியுள்ளார்.