உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி முக்கிய உணவாக இருக்கிறது என்று கூறியுள்ள டாக்டர் சிவராமன், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கஞ்சியை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், இன்றைய காலக்கட்டத்தில் கஞ்சி குடிக்க வேண்டும் என்று சொன்னால், நான் என்ன உடல்நிலை சரியில்லாமலா இருக்கிறேன். என்னை கஞ்சி குடிக்க சொல்றீங்க என்று கேட்கிறார்கள். ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிடுவதற்கு முன் சூப் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால் அந்த சூப் கஞ்சி வடிவத்தில் தான இருக்கும். ஆனால் சூப்பில் இருக்கும் அலங்காரங்களை பார்த்து அதை குடிக்கிறார்கள்.
அதே சமயம் வீட்டில் ஒரு கஞ்சி வைத்து கொடுத்தால் முகம் சுழித்துக்கொள்வார்கள். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொரு பருவத்திற்கும் தேவையான கஞ்சி இருக்கிறது. உதாரணமாக ஒரு பெண் மாதவிடாய் ஆகிவிட்டார் என்றால், உளுந்தங்கஞ்சி காய்ச்சி கொடுப்பார்கள். இன்றைக்கும் பல வீடுகளில் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
மாதவிடாய் ஆன பெண்ணுக்கு ஆரம்பத்தில் இருந்தே அரிசியும் தொலி உளுந்தும் சேர்த்து குழையும் வகையில் கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சம் தேங்காய் பூ சேர்த்து தருவார்கள். அதேபோல் இதில சீரகம் வறுத்து சேர்ப்பார்கள். இந்த கஞ்சிக்கு எள்ளு துவையல் அல்லது பிரண்டை சட்னி வைத்து கொடுப்பார்கள். அதேபோல் கஞ்சி இல்லாமல் உளுந்தை வைத்து சாதமாக செய்தும் கொடுப்பார்கள். இந்த உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு அவ்வளவு நல்லது. இந்த கஞ்சி தசைப்பகுதிகளை வலுப்படுத்த உதவும்.
அதேபோல் ஒரு குழந்தை சரியாக வெயிட் போடவில்லை, வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லை என்று சொன்னால் அந்த குழந்தைக்கு நேந்திரம் பழம் கஞ்சி கொடுக்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.