செலவே இல்லாமல் தொப்பையை குறைக்கலாம்… பெண்களே இதை நோட் பண்ணுங்க; டாக்டர் ராஜலெட்சுமி

ஹார்மோன்கள் சீராக இல்லாதபோது, மாதவிடாய் காலம் முடியும்போது ஈஸ்டோர்ஜன் ஹார்மோன், புரோஜஸ்டோர் ஹார்மோன்கள் குறையும்போது, உடலில் அதிகளவு கொழுப்புகள் படிய தொடங்கும்.

ஹார்மோன்கள் சீராக இல்லாதபோது, மாதவிடாய் காலம் முடியும்போது ஈஸ்டோர்ஜன் ஹார்மோன், புரோஜஸ்டோர் ஹார்மோன்கள் குறையும்போது, உடலில் அதிகளவு கொழுப்புகள் படிய தொடங்கும்.

author-image
WebDesk
New Update
Belly fat

பெரும்பாலான பெண்கள் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடல் பருமன். குறிப்பாக பிரசவித்த தாய்மார்களுக்கு உடல் எடை விரைவில் அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. வயிறு, கை தசை பகுதி, இடுப்பு கூட்டப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கொழுப்புகள் அதிகம் இருக்கும். அதேபோல் உள் உறுப்புகளாக கல்லீரல் பகுதிகளிரும் கொழுப்பு படிவங்கள் இருக்கும். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள் தான்.

Advertisment

ஹார்மோன்கள் சீராக இல்லாதபோது, மாதவிடாய் காலம் முடியும்போது ஈஸ்டோர்ஜன் ஹார்மோன், புரோஜஸ்டோர் ஹார்மோன்கள் குறையும்போது, உடலில் அதிகளவு கொழுப்புகள் படிய தொடங்கும். அதேபோல் கர்ப்பகாலத்தில், டயட் எதுவும் இல்லாமல் அதிகளவு சாப்பிட வேண்டும் என்று வரும்போது உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. சில பெண்களுக்கு தைராய்டு அளவு சீராக இல்லாதபோது, ரத்தத்தில் அதிகளவு கொழுப்புகள் இருக்கும்போது, உடல் பருமன் இருக்கும்.

இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, டாக்டர் ராஜலெட்சுமி கூறியுள்ளார். உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் தங்கள் வாழ்நாளில் தினமும் அரைமணி நேரம் தங்களுக்காக ஒதுக்க வேண்டும். இந்த அரைமணி நேரத்தில் வாக்கிங் செல்வது, சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாம். பொதுவாக பெண்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகு எஞ்சிய உணவைத்தான் சாப்பிடுவார்கள். இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ள உணவாகத்தான் இருக்கும்.

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் உழைப்பு இல்லாததால், இரவ அனைத்துமே ரத்தத்தில் கொழுப்பாகத்தான் மாறும். அதேபோல் உணவுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு அறுமருந்தான விஷயம் என்ன என்றால் அது வெந்தயம் தான். வெந்தயம் இன்சுலீன் ரெசிஸ்டென்ஸை குறைக்கும். ஈஸ்ட்ரோஜன் லெவலை சீராக வைத்துக்கொள்ளும்.இவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம்.

Advertisment
Advertisements

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்னைக்கு, நமது உடலில் இன்சுலீன் பயன்படுத்த முடியாத நிலையில் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்யக்கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. ஊறவைத்து முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் ஒரு சிறிய கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதனுடன், வெள்ளரிக்காய், தக்காளி, லெமன் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சாலட் போன்று சாப்பிடலாம். இதனுடன் கிரீன் டீ அல்லது வர மல்லி டீ சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: