கொழுப்பை சட்டுன்னு கரைக்கும் இந்த விதைகள்... இந்த அளவு சாப்பிட்டால் போதும்: டாக்டர் இளவரசி டிப்ஸ்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும், சாப்பிட வேண்டியது உடலில் இன்சுலின் அதிகம் சுரக்காத உணவுகளை தான்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும், சாப்பிட வேண்டியது உடலில் இன்சுலின் அதிகம் சுரக்காத உணவுகளை தான்.

author-image
WebDesk
New Update
Masala Makkana

உடலுக்கு ஏற்படும் பாதிப்புளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய முக்கிய உணவு பொருட்களில் ஒன்று மக்கானா. தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் இந்த மக்கானா அதிகமாக பீகாரில் பயிரிடப்படுகிறது. மக்கானாவில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

Advertisment

100 கிராம் மக்கானா விதைகள் எடுத்துக்கொண்டால் அதில் 15 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. 9.7 கிராம் புரோட்டீன் இருக்கும் இந்த மக்கானா விதைகளில் கொழுப்பு சுத்தமாக கிடையாது. 100 கிராம் விதையில் 76 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்கக்ரை நோயாளிகள் இந்த மக்கானா விதையை எடுத்துக்கொள்ளலாமா? அப்படியே எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறித்து டாக்டர் இளவரசி கூறியுள்ளார்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும், சாப்பிட வேண்டியது உடலில் இன்சுலின் அதிகம் சுரக்காத உணவுகளை தான். மக்கானாவில் அரிசி அளவுக்கு மாவுச்சத்து இருப்பதன் காரணமாக, இன்சுலின் ஹார்மோனை அதிகமாக தூண்டும். அதனால் உடல் எடையை குறைப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மக்கானா ஒரு சிறந்த உணவு என்று சொல்ல முடியாது. உடல் எடையை குறைத்துவிட்டு, அதை அப்படியே தக்கவைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கானா விதையை எடுத்துக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

குறிப்பாக ஒரு நாளைக்கு 20-25 கிராம் என அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அதிகளவு எடுக்கும்போது உடலில் மாவுச்சத்து அதிகமாகிவிடும். அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. குழந்தைகளுக்கும் ஒரு நாளைக்கு 30 கிராம் வரை கொடுக்கலாம். அதே சமயம் அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் இந்த மக்கானா விதைகளை சாப்பிட வேண்டாம். உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்பவர்கள், அதிகமான சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த மக்கானா விதையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: