ஒரு டம்ளர் ரவைக்கு இவ்வளவு அரிசி மாவு... தோசை அவ்வளவு சூப்பராக வரும்: செஃப் சொல்லும் டிப்ஸ்

ரவா தோசை மொறு மொறுவென வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

ரவா தோசை மொறு மொறுவென வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
Dosai Rava

ரவா தோசை மொறு மொறுவென வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

அரிசி மாவு – கால் கப்புக்கு அதிகமாக

Advertisment
Advertisements

மைதா மாவு - கால் கப்புக்கு குறைவாக

கோதுமை மாவு – ஒரு ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1 சிறிய துண்டு (துருவியது)

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி (உடைத்தது)

கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு மற்றும் மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்.

இந்த மாவு அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். அதன்பிறகு மாவு கெட்டியாகும் அடுத்து தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். மாவு மிகவும் நீர்த்த நிலையில் இருக்க வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை எடுத்து, தோசை கல்லின் மீது ஊற்றவும். மாவு மிகவும் நீர்த்ததாக இருப்பதால், தோசை வலை போல் வரும்.

தோசை பொன்னிறமாக மொறுமொறுப்பாக வரும் வரை வேக விடவும். இறுதியாக மொறுமொறுப்பான ரவா தோசை ரெடியாகிவிடும். இதனுடன் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: