/tamil-ie/media/media_files/uploads/2022/12/Wine3.jpg)
மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்று பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மது குடித்தால், இதயத்திற்கு நல்லது, அதிலும் குறிப்பாக ரெட் ஒயின் குடிப்பது மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது குறித்து டாக்டர் அருண்குமார் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் மதுவை எந்த அளவு எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு பிரச்னையை தான் ஏற்படுத்தும். ஆனால் தினமும் 30 எம்.எல்.ஒயின் குடித்தால் இதயத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள். இது குறித்து சில ஸ்டடிகளில், மிதமான அளவு மது அருந்தினால், உடலில் இருக்கும் நல்ல கொழுப்புகள் அளவு அதிகமாகும். ரத்த குழாயில் படியும் கெட் கொழுப்புகளின் அளவு குறையும் என்று சொல்லப்பட்டது.
இதன் காரணமாக மிதமான அளவு மது குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள். திராட்சையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் வைத்து எடுக்கப்பட்டதால் ரெட் ஒயின் குடிப்பது மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒயின் குடிப்பதற்கும், பிற மதுக்களை குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு வாரத்திற்கு 1-2 ட்ரிங்க் எடுத்தால் கூட ஸ்ரோக் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக நிரூபமாகியுள்ளது.
இதேபோல் லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு ஒரு மது குடிப்பது உங்களுக்கு ஒரு சிகரெட் பிடிப்பதற்க சமம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு ட்ரிங்க் எடுப்பது, வாழ்நாள் முழுவதும் கேன்சர் வருவதற்கான வாய்ப்பை ஒரு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 3 அல்லது அதற்கு மேல் ட்ரிங் எடுத்தக்கொண்டால், பிரஸ்ட் கேன்சர், குடல் புற்றுநோய் வருவதற்கான் வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
ஒரு ட்ரிங் என்பது, 350 எம்.எல்.பீர், 140 எம்.எல்.ஒயின், 45 எம்.எல் ஹார்ட்ரிங்ஸ். இவை அனைத்தையும் வாரத்திற்கு 2 ட்ரிங் தாண்டினாலே, கேன்சர், உள்ளிட்ட பிற நோய்கள் தாக்குதவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சமீபததிய ஆராய்ச்சியில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மிதமான அளவு குடிதால் உடலுக்கு நல்லது என்பதை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.