ஒரு நிமிடத்திலேயே விந்து வெளியேறுதா? இந்த இயற்கை வயாகரா சாப்பிடுங்க; எந்த பக்க விளைவும் இல்லை: டாக்டர் அலீம் டிப்ஸ்
மன அழுத்தம், கவலை, மோசமான பாலியல் அனுபவங்கள், ஹார்மோன் கோளாறுகள் என பல காரணங்களை சொல்லலாம். இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் அலீம் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
மன அழுத்தம், கவலை, மோசமான பாலியல் அனுபவங்கள், ஹார்மோன் கோளாறுகள் என பல காரணங்களை சொல்லலாம். இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் அலீம் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, கைப்பழக்கம் இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா? என்பது குறித்து சந்தேகங்கள் அதிகம் இருக்கிறது.
Advertisment
அதேபோல், திருமணமானவர்கள், எவ்வளவு தான் தாம்பத்தியம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக செயல்பட வயகரா இருக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பலரும் தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஒன்றுதான் விந்து முந்துதல். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.
விந்து முந்துதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் சரியான காரணம் கண்டறியப்படுவதில்லை. இருப்பினும், பொதுவாக உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளின் கலவையாக இது கருதப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், கவலை, மோசமான பாலியல் அனுபவங்கள், ஹார்மோன் கோளாறுகள் என பல காரணங்களை சொல்லலாம். இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் அலீம் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் ஒரு நிமிடத்தில் விந்து வெளியேறிவிடுகிறது, 30 விநாடிகளில் விந்து வந்துவிடுகிறது, மனைவியுடன் நெருங்கும்போதே விந்து வந்துகிறது இப்படி பலரும் பிரச்னைகளை சந்திப்பார்கள். இந்த பிரச்னைகளை தீர்க்க, பூண்டு உதவியாக இருக்கும். 3 நாளைக்கு ஒருமுறை ஒரு பூண்டை எடுத்து நசுக்கி தண்ணீரில் கலந்து குடிக்கும்போது ஆண் உறுப்புக்கு போகக்கூடிய ரத்த ஓட்டம் சீராகும். அப்போது விறைப்புத்தன்மை நீண்ட நேரம் இருக்கும் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.
Advertisment
Advertisements
அதேபோல் இஞ்சியும் இப்படி 3 நாளைக்கு ஒருமுறை, ஒரு சின்ன பீஸ் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். தினமும் காலை மற்றும் மாலையில் கால் டீஸ்பூன் சாதிக்காய் பொடியை தண்ணீரில் கலக்கி குடிக்கலாம். அதேபோல் உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், மோர், உள்ளிட்ட உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது உடல் சூடு தணியும். உடலில் குளிர்ச்சி அதிகமாகும்போது நரம்புகள் வலுவாகும் என்று கூறியுள்ளார்.