நெத்திலி மீன் தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் எல்லாமே எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும். இதனால் எந்த ஒரு வகையான புற்றுநோயும் ஏற்படாமல் தடுக்க முடியும். சரும புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் என்று எந்த புற்றுநோயும் ஏற்படாமல் தடுப்பதில் நெத்திலி மீன் மிகவும் முக்கியமான ஒரு உணவாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையுடன் சுத்தம் செய்த மீனை சேர்த்து, மசாலா அனைத்து மீன்களிலும் பரவுமாறு நன்கு பிசைவும்.
இதை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், மீன்களை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் பொரிக்கவும். மீனின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பொன்னிறமானதும், கறிவேப்பிலையை சேர்த்து மேலும் சில வினாடிகள் வறுத்து இறக்கவும். இப்போது சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்!