வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச் சுவை நம்மில் சிலரை, பொதுவாகக் குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும். வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. பசியைத் தூண்டக்கூடியது.
Advertisment
நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது. இந்த வெந்தயத்தை பயன்படுத்துவது குறித்து டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். வெந்தயத்தை அரைத்து பொடி செய்து வீட்டில் வைத்துவிடுங்கள். நாம் பயன்படுத்தும் தானியங்களில் வெந்தயம் மட்டும்தான் ஆக சிறந்த உணவாக இருக்கிறது. இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என இரு சத்துக்களுமே இருக்கிறது.
கரையும் நார்ச்சத்து இதயத்தில் மாரடைப்பு வராமல் தடுக்கும். கரையாத நார்ச்த்து மலத்தை வெளியேற்றும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் பெரிய பிரச்னையாக இருக்கிறது. உடலில் ஃபைபர் சத்து இல்லாதததால் இந்த மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. தினமும் வெந்தயம் 10 கிராம் எடுத்தால், கசப்பும் கிடைக்கும். மலமும் வெளியேறும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.