45% ஆரோக்கிய கொழுப்பு... ரேஷன் பாம் ஆயில் தீங்கானதா? தரவுகளுடன் விளக்கிய டாக்டர்
சிறிய பட்ஜி, போண்டா கடைசியில் இருந்து நாம் அதிகம் விரும்பி சாப்பிடும், பெரிய நிறுவனங்களில் உணவு பொருட்கள் வரை பலவற்றில் பாமாயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறிய பட்ஜி, போண்டா கடைசியில் இருந்து நாம் அதிகம் விரும்பி சாப்பிடும், பெரிய நிறுவனங்களில் உணவு பொருட்கள் வரை பலவற்றில் பாமாயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமையலுக்கு எண்ணெய் அவசியம் தான் என்றாலும், இன்றைய காலக்கட்டத்தில் பல உணவுப்பொருட்கள் எண்ணெயில் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் இதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதே சமயம் இந்த சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியமானதா என்றால், இந்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்று சொல்லலாம். கடலை எண்ணெயில் பல விதம் உள்ளது.
Advertisment
ரீபைண்ட் ஆயில், பாமாயில், மர செக்கு எண்ணெய் என பல வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இவற்றில் எந்த எண்ணெய் ஆரோக்கியமானது, எதை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு தெரியவதில்லை. அதே சமயம், ரேஷன் கடைகளில், பாமாயில் மளிவு விலையில் கொடுக்கிறார்கள். இந்த பாமாயில் உடலுக்கு நன்மை தருகிறதா? இது குறித்து டாக்டர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சிறிய பட்ஜி, போண்டா கடைசியில் இருந்து நாம் அதிகம் விரும்பி சாப்பிடும், பெரிய நிறுவனங்களில் உணவு பொருட்கள் வரை பலவற்றில் பாமாயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் மொத்த எண்ணெய் உற்பத்தில் 40 சதவீதம் இந்த பாமாயில் தான் இருக்கிறது. இந்த பாமாயில் எண்ணெயில் நிறைகொழுப்பு 45 சதவீதம், நிறைவுறா கொழுப்பு 40 சதவீதம் இருக்கிறது. அதேபோல் லினோலிக் ஆசிட், ஸ்டெரிக் ஆசிட் ஆகியவை இருக்கிறது. தேங்காய் எண்ணெயில் 90 சதவீதத்திற்கு மேல், ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கிறது. அதனால் அந்த எண்ணெய் கெடுதல் அல்ல.
அதேபோல் பாமாயிலில் 40 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. அதே சமயம் கடலை எண்ணெயில் 15-20 சதவீதம் மட்டுமே ஆரோக்கிய கொழுப்பு இருக்கிறது. இதன் காரணமாக பாமாயில் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அதிகப்படுத்துவதில்லை. மற்ற எண்ணெய்களை போல் இல்லாமல், பாமாயிலில் நிறை கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்புகள் சம அளவில் இருப்பதால், உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பாமாயில் இந்தியாவை சேர்ந்தது அல்ல. முதன் முதலில் ரேஷன் கடைகளில், விற்பனை செய்யப்படுவதால் அது ஏழைகள் பயன்படுத்தும் ஆயில் என்று பெயர் பெற்றுவிட்டது.
Advertisment
Advertisements
பொதுவாக மக்கள் பயப்படும்படி பாமாயில் அந்த அளவிற்கு கெடுதல் ஒன்றும் இல்லை. கெடுதல் என்று சொல்ல வேண்டும் என்றால், ஆயில் ரிபநேஷன் செய்யும்போது ஏற்படும் கெடுதல் தான். அது எல்லா ரீபைண்ட் ஆயிலுக்கும் பொருந்தும். இந்த காரணத்திற்காக நீங்கள் பாமாயிலை தவிர்த்தால், அதற்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தும் ரீபைண்ட் ஆயிலுக்கும் பாமாயிலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“