நமது உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்று நெய். ஆனால் நெய் சேர்த்துக்கொள்வது ஆபத்து என்று பலரும் கூறுவது உண்டு. அதே சமயம் நெய் தரும் நன்மைகள் என்று பல கட்டுரைகளை நாம் படித்திருக்போம். ஆனாலும் நெய் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இதை சாப்பிடலாமா வேண்டாமா? அதிகமாக சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படுமா என்று யோசித்தக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் உண்மையில் நெய் ஒரு அரோக்கியமான உணவு பொருள் தான். அதிகம் எடுத்துக்கொண்டால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், குறைந்த அளவிலான நெய் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமாக இருக்கும். நெய்யில் உள்ள ஃபேட்டிக் ஆசிட் உடலில் சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நெய் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட நெய் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் பருமனை தவிக்க தினமும் 10 முதல் 15 கிராம் வரை நெய் சேர்த்துக்கொள்வது நன்மை தருவதாக இருக்கும்.
தினசரி உணவில் தொடர்ந்து நெய் சேர்த்துக்கொள்ளும்போது உடல் உறுதியாகவும் ஆரோக்கியமானதாகவுமு் இரக்கும் உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறி உடல் தூய்மையடையும். கண்பார்வை தசைகள் வலுவடையும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து நெய் எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.
வெண்ணெய்யுடன் ஒப்பிடும்போது நெய்யில் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளதால், தினசரி உணவில் வெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தக்கொளவது ஆரோக்கியத்திற்கு நல்லது. அவ்வாறு சாப்பிடும்போது உணவு விரைவில் செரியமானடையவும் உதவும்.
அதேபோல் சுத்தமான நெய் நீண்டகாலத்திற்கு கெடாமல் இருக்கும். இதனால் அதை ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் எடையை குறைக்கும் செய் செரியமான மண்டலத்தை சீராக மாற்றுகிறது.
வைட்டமின் ஏ.டி,ஈ மற்றும் கே உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய நெயில் கரையக்கூடிய கொழுப்புகள் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் செரிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் வைட்டமின்களை உறிஞ்சி அதிக ஆரோக்கித்தை கொடுக்கிறது.
மேலும் மலச்சிக்கலை போக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். வாய்புண், வயிற்றுக்கோளாறு, வயிற்றுப்புண், உள்ளிட்ட பாதிப்புகளை நீக்கும் நெய் உடலில் பலத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்தாகவும் பயன்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil