நாள் முழுவதும் மனநிலை சரியாக அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கிய அவசியம். காலை எழுந்தவுடன் உங்கள் உடலில் நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் சொல்லிவிடும் உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை. இதில் காலை எழுந்தவுடன் சிலர் அமிலத்தன்மையை உணர்கிறார்கள், சிலர் முகம் வீங்கியதாகவும், உடல் ஆற்றல் குறைவாகவும் உணர்கிறார்கள்,
அதேபோல் "காலையில் நீங்கள் முதலில் சாப்பிடும் உணவுகள் மிகவும் மக்கியமானது. இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருப்பதால் காலையில் சீக்கிரமாக உண எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறினார்.
கருத்தில் கொள்ள வேண்டிய உணவுகள்
காலையில் எழுந்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது நீரேற்றம். தூக்கத்தின் போது பல மணி நேரங்கள் தண்ணீர் இல்லாமல் உங்கள் உடல் தாகமாக இருப்பதால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது 1-2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதுதான். இதன் மூலம் உங்கள் தாகத்தைத் தணிக்கவும், உங்கள் உடல் அமைப்பைப் புதுப்பிக்கவும் வேண்டும்.
அதன்பிறகு, கறிவேப்பிலை, துளசி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் அரைத்து சாப்பிடலாம். “இந்த இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கவும், இதன் மூலம் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். பிறகு, இயற்கை மரப்பட்டை மூலிகை) தண்ணீரைச் சாப்பிடுங்கள், இது அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த டானிக் ஆகும். இதைத் தயாரிக்க, 1 டீஸ்பூன் பட்டை பவுடரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் குடிக்கவும், ”
பலர் காலையில் எழுந்தவுடன் நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மையை அனுபவிக்கிறார்கள். இது இரவு உணவு தாமதமாக காரணமாக இருக்கலாம். "உங்கள் இரவு உணவை உறங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட முயற்சி செய்யுங்கள். எழுந்தவுடன் அமிலத்தன்மையை குணப்படுத்த, வெறும் வயிற்றில் 8-10 கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்கள்.
கருப்பு திராட்சைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் உங்கள் செரிமான அமைப்பில் அதிக அமில அளவை நடுநிலையாக வைத்திருக்க உதவும். காலை எழுந்தவுடன் உடல் வீக்கத்துடன் இருப்பவர்கள், 1 டீஸ்பூன் சீரகம், 1 ஏலக்காய், 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், ஒரு சிட்டிகை கேரம் விதைகள் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து தண்ணீர் பாதியாக குறைந்த பின்பு குடிக்க வேண்டும். அதை வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்,
நீரிழிவு நோயாளிகள் பருவகால பழங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் கலவையுடன் கூடிய லேசான காலை உணவை உட்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் தானியங்கள் நிறைந்த காலை உணவை உட்கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை.
உங்கள் வீட்டில் காலை உணவில் இயற்கையான புரதச் சத்துக்களைச் சேர்த்து, முளைகளுடன் போஹா, பசையம் வறுத்த தோசையுடன் முட்டை, இரவு ஊறவைத்த முளைகளுடன் ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடலாம்!
அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் அனைத்து இரைப்பை பிரச்சனைகளுக்கும் முதலிடத்தில் இருப்பதால், காலையில் டீ அல்லது காபி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். "மேலும், பழங்களுடன் பால் கலப்பது போன்ற 'விருத் ஆஹாரை' பயிற்சி செய்யாதீர்கள், இது மிகவும் தவறு," என்று அவர் குறிப்பிட்டார்.
உங்கள் காலை நேரத்தை எளிமையாகவும், தொந்தரவின்றியும் வைத்திருங்கள், தியானம் செய்யுங்கள் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மன அழுத்தத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் பங்கேற்காதீர்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.