New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/20/Ei9KYbx7w6Z33yFgZdTS.jpg)
சப்பாத்தி பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு. நல்ல சைவ குருமா, சிக்கன் கிரேவி என இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதற்கு முதலில் சப்பாத்தி சாப்ட்டாக இருக்க வேண்டும். சாப்பட்டாக இல்லையென்றால் சாப்பிட பிடிக்காது. நாம் என்னதான் பக்குவமாக மாவு பிசைந்தாலும் சில நேரம் சப்பாத்தி மிருதுவாக வராது.
ஆனால் சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் நாமும் ஈஸியாக சாஃப்ட் சப்பாத்தி செய்யலாம். மிருதுவான சப்பாத்தி எப்படி செய்ய வேண்டும் என செஃப் தீனா தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதன்படி,
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு’
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் உப்பு மற்றும் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் உதிரி உதிரியாக பிசைந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த பின்னர் மாவை இரண்டாக மடித்து, பின்னர் தட்டி பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்படி சில முறை செய்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மாவுடன் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் அதேபோல் இரண்டாக மடித்து தட்டி பிசைந்துக் கொள்ளுங்கள். பின்னர் மாவை 20-30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இப்படி வைக்கும்போது மாவு காயாமல் இருக்கவே எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாவை பிசைந்த பின்னர் வெள்ளை காடா துணி கொண்டு 20-30 நிமிடங்கள் மூடி வைத்து விடுங்கள். பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி தேய்த்துக் கொள்ளுங்கள்.
தேய்க்கும்போது ஒரே பக்கம் தேய்க்க கூடாது. இரண்டு முறை தேய்த்த பின்னர் திருப்பி போட்டு தேய்க்க வேண்டும். ஒரே பக்கம் தேய்த்தால் சில சமயம் சப்பாத்தி சாப்ட்டாக வராது.
பின்னர் தேய்த்த மாவை கையில் எடுத்து தட்டிக் கொள்ள வேண்டும். அப்போது தேய்ப்பதற்காக சேர்த்து உதிரி மாவு கீழே விழுந்து விடும். இப்போது சூடான தோசைக் கல்லில் போட்டு, சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் முதலில் சேர்க்காமல் இருப்பது முக்கியம்.
அவ்வளவு தான் சாஃப்ட் சப்பாத்தி ரெடி. உங்களுக்கு பிடித்த சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.