ரெடிமேட் மிக்ஸ் இல்லாமல், சுவையான குலாப்ஜாமுன் செய்வது எப்படி என்பதை பிரபல செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்
பால்கோவா (சர்க்கரை இல்லாதது)– 450 கி
பால்கோவா (சர்க்கரை சேர்த்தது) – 50கி
மைதா – 150 கி
குக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
சர்க்கரை – 500 கி
ரோஸ் வாட்டர் – ஒன்னரை டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில், பால்கோவா, மைதா குக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்ந்து நன்றாக மசித்து எடுத்துக்கொள்ளவும். இந்த மாவு எவ்வளவுக்கு எவ்வளவு மசிகிறதோ அவ்வளவு சாஃப்ட்டாக குலாப்ஜாமுன் வரும்.
அதன்பிறகு ஒரு பானில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றில் அதில் சர்ச்சரை ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி, சேர்த்து ஒரு நூல் பதம் வரும்வரை சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும்.
அடுத்து ஒரு பானில், கடலை எண்ணெய் விட்டு காய வைக்க வேண்டும். அதன்பிறகு, மசித்து வைத்துள்ள பால்கோவா மைதா கலவையை சிறுசிறு உருண்டைகளாக செய்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும், உருண்டைகளை அதில் போட்டு பொறித்து எடுக்கவும். 6-7 நிமிடங்கள் இந்த உருண்டைகள் பொறிய வேண்டும்.
நன்றாக பொன்னிறமாக பொறிந்ததும், இந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகு (ஜீரா) சேர்த்து ஊறவைக்கவும். அரைமணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான குலாப்ஜாமுன் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“