இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பரோட்டா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பரோட்டா சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கு என்று பல செய்திகள் வந்தாலும், ஹோட்டல்களில் பரோட்ட விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதை பார்க்கலாம். இந்த பரோட்டாவுக்கு சுவையான ஒரு சைவ சால்னா எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோமா?
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
வெங்காயம் – 4
துருவிய தேங்காய் – ஒரு மூடி
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி ஒரு கைப்பிடி
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரிஞ்சு இலை - 2
பச்சை மிளகாய் – 4
கடலை மாவு – ஒன்னறை டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் – முதலில் 250 எம்.எல், அடுத்து இருமுறை தலா ஒன்றைரை லிட்டர்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாண் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக காய விடவும். அதன்பிறகு துருவிய தேங்காயில், சோம்பு, கசகசா, முந்திரி, சேர்ந்து நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் உண்ண பாணில் எண்ணெய் சூடானதும், அதில் பிரிஞ்சு இலை, பட்டை, ஏலக்காய் லவங்கம் ஆகியவற்றை சேர்க்கவும். அதன்பிறகு நறுக்கிய
வெங்காயத்தை இதனுடன் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கோல்டன் கலருக்கு வந்தபின், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். நன்றாக கிளறிவிட்டு, அதில் பச்சை மிளகாய் சேர்க்கவும். அடுத்து புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அதன்பிறகு கடலை மாவை கரைத்து வைத்துக்கொள்ளவும். மசாலா நன்றாக கொத்தித்வுடன், அதில் தேங்காய், கசகசா சேர்ந்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்க்கவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொத்தித்தவுடன், கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை அதில் சேர்க்கவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இது 15 நமிடங்கள் கொதித்த பின்பு, கொத்தமல்லி இலை சேர்த்து ஸ்டவ்வை ஆப் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“