ஆரோக்கியமான உணவு என்று வரும்போது சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த சப்பாத்தி சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
ஆனால் சப்பாத்தி செய்யும்போது அது மிருதுவாக வரவில்லை என்று பலரும் புலம்புவது உண்டு. சப்பத்திக்கு அழகே ஃசாப்ட்நஸ்தான் ஆனால் சப்பாத்தி செய்யும்போது பலமுறை முறுக்கு போன்று முறுமுறுவென இருக்கும். இதனால் சப்பத்தி மீதுள்ள ஆசையே போய்விடும்.
ஆனால் இந்த முறையில் சப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், சாப்பிடும் ஆசையை தூண்டும் வகையில் இருக்கும். பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி பாக்கிரி ரொட்டி எப்படி செய்வது என்பது குறித்து தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – ஒரு பவுல்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
ஓமம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இவ்வாறு பிசைந்த மாவை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து அதன்பிறகு எடுத்து சிறய உருண்டைகளாக பிடிக்கவும்.
அதன்பிறகு உருண்டைகளை எடுத்து நெய் தொட்டு சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்ட வேண்டும். இவ்வாறு உருட்டிய சப்பாத்தியை தவாவில் போட்டு எடுத்தால் சுவையாக மிருதுவான பாக்கிரி ரொட்டி தயார்.
அடுப்பை அதிக தீயில் வைத்து சப்பாத்தி செய்யும்போது சப்பாத்தி மிருதுவாக கிடைக்கும். இந்த முறையில் சப்பாத்தி செய்யும்போது அதை துணி மாதிரி மடிக்கும் அளவுக்கு ஃசாப்டாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil