சுவையான முருங்கை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 10 டீஸ்பூன்
வரமிளகாய் – 10
கொத்தமல்லி – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒன்றரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
முருங்கைக்காய் – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயப்பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலில், நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும், அதில், வரமிளகாய், சேர்த்து கரும் சிவப்ப ஆகும் வரை வறுக்கவும். அடுத்து இதில், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அடுத்து சீரகம், சேர்த்து பொறிந்தவுடன், சோம்பு, மிளகு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை ஆப் செய்துவிட வேண்டும். அதன்பிறகு இநத கலவையில் இருந்து எண்ணெயை வடித்துவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில், நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்தவுடன், அதில் வெந்தயம் சேர்த்து, கருவேப்பிலை, பூண்டு, சேர்த்து வதக்கிவிட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அதில் முருங்கைக்காய் சேர்த்து கிளறவும். அதன்பிறகு இதில், மிளகாய் தூள், சேர்த்து, புளி கரைசலை சேர்க்கவும். அதன்பிறகு 200எம்.எல் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இந்த குழம்பு 8-10 நிமிடங்கள் கொதிக்க வேண்டும்.
அதன்பிறகு வறுத்து அறைத்து வைத்துள்ள மல்லி மிளகாய் கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் பெருங்காய பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி கொதித்து அதில், ஒரு கைப்பிடி மல்லி இலை, ஒரு டீஸ்பூன் ஜாக்ரி சேர்த்து ஒரு மணி நேரம் மூடி வைத்து இறக்கினால் சுவையான முருங்கை குழம்பு தயார்.